வைரலாகும் ரஜினி – அஜித் சந்திப்பு போட்டோ!

வைரலாகும் ரஜினி – அஜித் சந்திப்பு போட்டோ!

Share it if you like it

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரும் இணைந்திருக்கும் போட்டோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், உண்மையில் நடந்ததே வேறு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

பொதுவாக, ரஜினிக்கும், அஜித்துக்கும் இடையே நல்ல நட்புறவு இருப்பது உண்மைதான். இருவருமே பரஸ்பரம் நட்பு பாராட்டி வருபவர்கள்தான். பல சந்தர்ப்பங்களில் நடிகர் அஜித்குமாரை ரஜினிகாந்த் பாராட்டி இருப்பதும் கவனிக்கத்தக்கது. அதேபோல, அஜிக்குமாரும், ரஜினி மீது மிகுந்த பற்றும், மரியாதையும் வைத்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இருவரும் இணைந்திருக்கும் படம், உண்மையில் எடுக்கப்பட்ட படமே இல்லை என்பதுதான் விஷயமே.

ஆம், கமல்ஹாசன் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் படம் விக்ரம். இதையொட்டி, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தனது நண்பருமான ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சென்றிருந்தார் கமல்ஹாசன். கூடவே, அவரது படக்குழுவினரையும் அழைத்துச் சென்றிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பாக புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும், இது குறித்து படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜும், மேற்படி இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து, கமல் – ரஜினியின் நட்புறவு குறித்து ட்விட்டரில் நெகிழ்ச்சி ததும்பு பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், சூப்பர் ஸ்டார் ரஜினியை, அவரது இல்லத்தில் வைத்து நடிகர் அஜித்குமார் இன்று சந்தித்ததாகக் கூறி, இருவரும் இணைந்து எடுத்துக் கொண்டதாக ஒரு போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், மேற்படி போட்டோவில் ரஜினி, அஜித் தோளில் கைபோட்டிருப்பதுபோல இருப்பதோடு, இருவருமே லேட்டஸ்ட் கெட்டப்பில் இருந்ததுதான். எனவே, இது உண்மையான போட்டோதான் என்று கருதி அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்கள். இதனால், மேற்கண்ட போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

எனவே, பரபரப்படைந்த பத்திரிகையாளர்களும், சினிமா துறையினரும் என்ன ஏது என்று விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால், அதன் பிறகுதான் தெரிந்தது, மேற்படி புகைப்படம் முற்றிலும் போலியானது என்பதும், போட்டோ ஷாப் மூலம் யாரோ விஷமிகள் ரஜினியும் அஜித்தும் ஒன்றாக இருப்பதுபோல எடிட் செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததும் தெரியவந்தது. உண்மையில் ரஜினியும், அஜித்தும் 2019-க்கு பிறகு சந்திக்கவில்லை என்பதும் தெரியவந்தது. அதாவது, ரஜினி, விக்ரம் பட வெளியீடு தொடர்பாக தன்னை சந்திக்க வந்த கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும், அஜித் தனது ரசிகர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் எடிட் செய்து, ரஜினியும் அஜித்தும் இருப்பது போல செய்திருக்கிறார்கள். இதையடுத்து, அஜித்தின் செய்தித் தொடர்பாளரும், மேலாளருமான சுரேஷ் சந்திரா, மேற்படி ட்விட்டரில் பரவும் போட்டோ போலியானது என்று தெரிவித்திருக்கிறார்.

உண்மையான போட்டோவும்… எடிட் செய்யப்பட்ட போட்டோவும் இதுதான்…

image


Share it if you like it