இயக்குனர் பா. ரஞ்சித்திற்கு திரைப்பட ரசிகர் ஒருவர் அட்வைஸ் கொடுத்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகிலேயே அதிக திரைப்படங்கள் எடுக்கும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது. இந்திய திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதே போல, தமிழ் திரைப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதும் உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலக நாயகன் கமலஹாசன் என பலர் தமிழ் திரை உலகை உச்சத்திற்கு கொண்டு சென்றவர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இப்படியாக, இருந்த தமிழ் திரை உலகில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷனநரிகள், பிரிவினைவாதிகள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் சித்தாந்தம் எண்ணம் கொண்டவர் புகுந்த பின்பு இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது என்பதே நிதர்சனம்.
தி.மு.க.வின் குடும்ப ஆதிக்கம் காரணமாக தமிழ் திரை உலகம் மெல்ல மெல்ல தனது செல்வாக்கை இழந்து வருவது ஒருபுறம் என்றால், ஹிந்துமத வெறுப்பு, ஜாதி பிரச்சனை மற்றும் தேச பிரிவினையை மக்களிடம் திணிக்கும் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அரைத்த மாவையே அரைப்பது போல தொடர்ந்து ஒரே வட்டத்திற்குள், தமிழ் திரை உலகம் சுற்றி வருவதாக பல விமர்சனங்கள் உள்ளது. இதன்காரணமாக, வெறுப்படைந்த தமிழக மக்கள் மாற்று மொழியை கொண்ட திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கே.ஜி.எப், ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, போன்ற டப் செய்யப்பட்ட திரைப்படங்கள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படங்களில், மதவெறுப்போ, ஜாதி வெறுப்போ இல்லை என்பதே நிதர்சனம்.
அந்த வகையில். அனைத்து தமிழக திரையரங்குகளில் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப். தமிழ் மொழியில் டப் செய்யப்பட்ட இந்த கன்னட மொழி திரைப்படம். தமிழ்நாட்டில் 100 கோடியை வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது. இந்நிலையில், கே.ஜி.எப். திரைப்படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது கூறியதாவது.
ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எப் திரைப்படங்கள் உலக தரத்திற்கு சென்று விட்டது. அவர்கள் வேற லெவலில் சிந்திக்கிறார்கள். இங்கு உள்ளவர்கள் என்னை நசுக்கிட்டான், பிதுக்கிட்டான், அமிக்கிட்டான் என்று படம் எடுத்து கழுத்தை அறுக்கிறார்கள். ஒன்னு அவர்கள் தரத்திற்கு படம் எடுங்கள் இல்லை என்றால் தமிழ் திரை துறையை மூடி விடுங்கள். தயவு செய்து எங்கள் உயிரை எடுக்காதீர்கள். குறிப்பாக பா. ரஞ்சித் போன்ற தமிழ் இயக்குனர்களுக்கு இதை சொல்லி கொள்கிறேன் என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். ,