தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்குச் சொந்தமாக ஹோட்டல்கள் தமிழகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னை, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் முக்கிய நகரங்களான திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் தங்குவதற்குத் தகுந்த வகையில் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மதுரையில் தனியார் ஹோட்டல்களுக்கு இணையாக தமிழ்நாடு ஹோட்டலில், 400 பேர் அமரக்கூடிய திருமண அரங்கம், தனியார் மற்றும் அரசு நிகழ்ச்சி, கருத்தரங்குகள், சமூக நிகழ்ச்சிகள் நடத்துவதற்குப் பிரம்மாண்ட அரங்கம், நட்சத்திர விடுதி போல அமைக்கப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணத்துடன் இலவச காலை உணவுடன் கூடிய குளிர்சாதன வசதியுள்ள அறைகள், விசாலமான கார் பார்க்கிங், விளையாட்டு மைதானம் மற்றும் அதி நவீன மின் உலர் சலவையகம் வசதிகள் எல்லாம் உள்ளன.இந்த நிலையில், ஊட்டியில் செயல்பட்டு வரும் “ஹோட்டல் தமிழ்நாடு” என்கிற சுற்றுலா விடுதி இனி, “எமரால்ட் லேக் ரெசாட்” என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு, விடுதியின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை மாற்றியுள்ளனர். இந்த முயற்சியானது, தமிழ்நாடு ஹோட்டலை தனியார் வசம் ஆக்கும் முயற்சிக்கான முன்னோட்டமே என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.