வாஞ்சிநாதனை அவமானப்படுத்திய தமிழக அரசு : குரூப் 1 வினாத்தாளா ? அறிவாலயம் முரசொலி பத்திரிக்கையா ? வெடிக்கும் சர்ச்சை !

வாஞ்சிநாதனை அவமானப்படுத்திய தமிழக அரசு : குரூப் 1 வினாத்தாளா ? அறிவாலயம் முரசொலி பத்திரிக்கையா ? வெடிக்கும் சர்ச்சை !

Share it if you like it

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித்த் தேர்விற்கான அறிவிப்பு மார்ச் 28 ஆம் தேதி வெளியானது. இதனைத்தொடர்ந்து, இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை பெறப்பட்டது. மொத்தம் 90 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூலை 13 ஆம் தேதி சனிக்கிழமை நடைப்பெற்றது. தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வை 2.38 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில் குரூப் 1 தேர்விற்கான வினாத்தாள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாளானது மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் நிலையில் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு திமுகவின் சித்தாந்தத்தை வினாத்தாள் என்கிற பெயரில் திணிக்க கூடாது. மேலும் நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு செக்கிழுத்து ரத்தம் சிந்தி பல இன்னல்களை சந்தித்து இன்னுயிரை கொடுத்து சுதந்திரம் வாங்கி கொடுத்து சென்றுள்ளனர். அவர்களை எல்லாம் அவமானப்படுத்தும் விதமாக தமிழக அரசு சர்ச்சையான முறையில் வினாத்தாளில் கேள்வி ஒன்றை கேட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு வினாத்தாளில் கேள்வி எண் 111 ல், ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யார் ? என கேள்வி கேட்கப்பட்டு a)சங்கர கிருஷ்ணன், b)நீலகண்ட பிரம்மசாரி,c)மாடசாமி, d)வாஞ்சிநாதன் என நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் விடையாக ஆப்ஷன் 4 d)வாஞ்சிநாதன் என கூறப்படுகிறது. இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரான ஆஷ்ஷை சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று தனது இன்னுயிரை நாட்டிற்காக அர்ப்பணம் செய்தார். அவரை எப்படி குற்றவாளி என்று நீங்கள் அழைக்கலாம். சுதந்திர போராட்ட வீரர்களை அவமானப்படுத்தி ஆங்கிலேயர்களை கவுரவபடுத்துவதுதான் திராவிட மாடலா ?

இதுமட்டுமல்லாமல் கடவுள் மறுப்பாளரான ஈ.வே.ராமசாமி நாயக்கரை குறிப்பிடும் வகையில் பற்றி 4 ,5 கேள்விகள் கேட்ப்பட்டுள்ளது. அதில் கேள்வி எண் 68 ல் தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று சான்றளிக்கப்பட்ட தலைவர் யார் ? என கேட்கப்பட்டுள்ளது. ஆனால் நமது ஏவுகணை நாயகன் மேதகு அப்துல் கலாம் அவர்களை பற்றி ஒரு கேள்வி கூட இல்லை. அப்துல் கலாம் அவர்களை விட ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. இதுமட்டும் அல்லாமல் திராவிட கட்சியை சேர்ந்த சுப.வீரபாண்டியன் குறித்து கூட கேள்வி வந்துள்ளது தான் கொடுமையிலும் கொடுமை.

மேலும் ஹிந்து துறவிகளை விமர்சிக்கும் வகையிலும் இஸ்லாமிய மதத்தை பெருமை படுத்தும் வகையிலும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

துறவிகளுக்கு இகழ்ச்சி வராமல் இருக்க அவர்கள் என்ன ஒழுக்கம் மேற்கொள்ள வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இன்பம் துன்பம் வீடு பந்தம் என அனைத்தும் தியாகம் செய்து இறைவனிடம் சரணாகதி அடைபவர்கள் தான் துறவி.அப்படிப்பட்ட துறவிகளை எதிர்மறையாக விமர்சிக்கும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

மேலும் இஸ்லாமியர்களை பெருமைப் படுத்தும் வகையில், 1933 ல் பாகிஸ்தானுக்காக கோரிக்கை விடுத்த முதல் முஸ்லீம் தலைவர் யார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை, தேச பிரிவினை என மக்கள் பலரும் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். அதனை மாற்றி காங்கிரஸ் கட்சியை நல்ல விதமாக திணித்துள்ளனர்.

மொத்தத்தில் குரூப் 1 வினாத்தாள் ஹிந்து துறவிகளையும்,ஹிந்து கோவில்களையும். விடுதலை போராட்ட வீரர்களையும் இழிவுபடுத்தி, இஸ்லாமிய மதத்தையும் காங்கிரஸையும் பெருமை படுத்தி, திராவிட சித்தாந்தத்தை உட்புகுத்தும் அறிவாலய முரசொலி பத்திரிக்கை போல் தான் உள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *