தமிழக மக்களின் நலனை பற்றி துளியும் அக்கறை கொள்ளாமல், மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்ட விடியல் அரசிற்கு. நாளுக்கு, நாள், தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அக்காணொளியில் எம்.பி இவ்வாறு பேசியுள்ளார்.
இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் மாறி கொண்டு இருக்கிறது. மதுவிற்கு அடிமையாக கூடிய நிலை இங்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. அது குறித்து இந்த அரசிற்கு அக்கறை இல்லை என்று, தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், ஏழை, எளியவர்கள், மற்றும் கனிமொழி உட்பட பலர் தங்களின் கோவத்தை வெளிப்படுத்தினாலும் நமது மிக்சர் முதல்வர் யாரின் கருத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க போவதில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1404741591084933121