இசைஞானி இளையராஜாவிற்கு ஆதரவாக தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குரல் கொடுத்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும்” என்ற புத்தகத்தை அண்மையில் புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் வெளியிட்டது. இப்புத்தகத்திற்கு, இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். “அம்பேத்கரை தெரிந்துகொள்வதைப் போல, அவரது கருத்தை அமல்படுத்துபவர்களையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும், சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயல்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு, தமிழக பா.ஜ.க, மாற்று கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் இசைஞானியின் கருத்தை வரவேற்று இருந்தனர்.
பாரதப் பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் நற்பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என பலர் இசைஞானியை சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை #என்றும்_ராஜா_இளையராஜா என்னும் ஹேஷ் டேக்கையும், அது குறித்த காணொளியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஆதரவு தெரிவித்து இருந்தார். அந்த வகையில், தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் இசைஞானிக்கு ஆதரவாக இவ்வாறு குரல் கொடுத்துள்ளார். .
இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே !!!!