இந்தியாவை பா.ஜ.க. விற்றுவிட்டது என்று வசைபாடிய டுபாக்கூர் போராளிகள், தற்போது தமிழக அரசு பத்திரங்களை விற்பது குறித்து வாய் திறக்கவில்லை என்று நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
நாட்டின் வருவாயை அதிகப்படுத்துவதற்காக ஏர் இந்தியா போன்ற நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்தது. இதனால், அய்யகோ மோடி இந்த நாட்டையே விற்று வருகிறார் என்று கூப்பாடு போட்டது தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும். இதற்கு ஒத்து ஊதியது தமிழகத்திலுள்ள சில அடிமை மீடியாக்கள். மேலும், தி.மு.க. ஆதரவு போலி போராளிகளும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தங்களது கருத்துகளை பதிவு செய்தனர் கூக்குரல் எழுப்பி வந்தனர்.
இதனிடையே, மார்ச் 18-ம் தேதி தமிழக அரசின் முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பற்றாக்குறையை சமாளிக்க 90,000 கோடி கடன் வாங்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், தமிழக அரசின் மொத்த கடன் சுமை 6.53 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக, தமிழக மக்களின் மீதான கடனும் அதிகரித்திருக்கிறது. அதாவது, தமிழகத்தில் வசிக்கும் தனி நபர் மீதான கடன் 2.60 லட்சம் ரூபாயாக இருந்தது. இது தற்போது தமிழக அரசு வாங்கும் கடன் மூலம், தனிநபர் மீதாக கடன் 3 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில்தான், தமிழக அரசு 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை ஏல விற்பனை செய்ய முடிவெடுத்து அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறது. இதைப் பார்த்து விட்டுத்தான் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். மோடி நாட்டை விற்கிறார் என்று கூறிவிட்டு, தற்போது நீங்கள் தமிழகத்தை விற்கிறீர்களே என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்து வருகின்றனர்.