சென்னையில் ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் ஆட்டையபோட்டதும், நிலத்தை மீட்டுத்தரக் கோரி, அக்குடும்பத்தினர் முதல்வர் அலுவலகத்தில் முட்டிபோட்டு மனு கொடுத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக, கிறிஸ்தவ மிஷனரிகளைப் பொறுத்தவரை அரசு புறம்போக்கு நிலங்கள், மலைக்குன்றுகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து, ஒரு சிலுவையை வைத்து வழிபாடு நடத்தத் தொடங்குவதும், பின்னர், காலப்போக்கில் அந்த இடத்தில் ஒரு சர்ச்சை கட்டி உரிமை கொண்டாடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மைனாரிட்டி என்பதால் அரசும் இதை கண்டுகொள்வதில்லை. இதை சாக்காக வைத்துக் கொண்டு சில தனியார் நிலங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் கிறிஸ்தவ மிஷனரிகள். அந்த வகையில், சென்னையில் ஒரு தனியார் இடத்தை ஆக்கிரமித்து ஆட்டையபோட, அந்தக் குடும்பம் முதல்வர் அலுவலகத்தில் முட்டிபோட்டு மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் கோதண்டராமன். இவருக்குச் சொந்தமாக ஓட்டேரி பகுதி ஸ்டான்ஸ் ரோட்டில் இருந்த 8,063 சதுர அடி நிலத்தை தனது மகன்கள் சரவணப் பெருமாள், தனஞ்செயன், தனசேகர், தசரதன் ஆகியோருக்கு பிரித்துக் கொடுத்தார். இந்த இடத்தை மேற்படி சகோதரர்களிடமிருந்து 1980-ம் ஆண்டு வாடகைக்கு பெற்றிருக்கிறார் சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜான் வெங்கடேசன். பின்னர், அந்த இடத்தில் ஜெபக்கூடம் அமைத்திருக்கிறார். மாதாமாதம் வாடகை வருவதால் மேற்படி சகோதரர்களும் கண்டுகொள்ளவில்லை.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாதிரியார் ஜான் வெங்கடேசன், மொத்த இடத்தையும் அபகரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வாடகைப் பணம் தருவதையும் நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 12 கோடி ரூபாய் என்கிறார்கள். இதையடுத்து, பாதிரியாரிடமிருந்து தங்களது நிலத்தை மீட்டுதரக் கோரி, சரவணப்பெருமாளும், அவரது சகோதரர்கள் குடும்பத்தினரும் சேர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மேலும், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், முதல்வரின் சிறப்பு அதிகாரி, காவல்துறை டி.ஜி.பி. என அனைவருக்கும் அந்த மனு தபாலிலும் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சரவணப் பெருமாள் குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் நேற்று மாலையில் சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். அங்கு அனைவரும் முட்டி போட்டபடியே முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு நகர்ந்து சென்று மனு கொடுத்திருக்கிறார்கள். அந்த மனுவில், பாதிரியாரிடமிருந்து தங்களது நிலத்தை மீட்டுத் தருமாறும், பாதிரியாருக்கு ஆதரவாக போலீஸார் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், ஆகவே, போலீஸ் கமிஷனரின் நேரடி பார்வையிலோ அல்லது வேறு அதிகாரியின் நேரடி பார்வையிலோ அல்லது சி.பி.சி.ஐ.டி. போலீஸாரோ விசாரிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.