இஃப்தார் நாடகமும், நிஜமும் என்கிற தலைப்பில் அண்ணாமலையின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு, தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அதிகரித்திருக்கிறது. தலைவர் அண்ணாமலையிலும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சியை வளர்த்து வருகிறார். அதேபோல, ஆளும்கட்சியினர் செய்யும் முறைகேடு, ஊழல் ஆகியவற்றை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி வருவதோடு, பா.ஜ.க. மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார். மேலும், ஜாதி, மத பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகி வருகிறார்.
இந்த நிலையில்தான், இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லீம்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழக பா.ஜ.க. சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்புக் கஞ்சி அருந்தி நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தி.மு.க. சார்பிலும் இதுபோன்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அப்போதெல்லாம், அதன் தலைவர் ஸ்டாலின் உட்பட அக்கட்சியினர் இஸ்லாமியர்களைப் போல தலையில் குல்லா அணிந்து, போலி வேஷம் போட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இதேபோலதான், அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றவர்களும் குல்லா அணிந்து வேஷம் போடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
ஆனால், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போலி வேஷம் போடவில்லை. அதாவது, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரைப் போல குல்லா அணிந்து நாடகம் போடவில்லை. அதோடு, தனது அடையாளமான காவித் துண்டை தோளில் போட்டவாறே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவரது இந்த எதார்த்தமான செயல்தான் அனைத்துக் கட்சியினர் மத்தியிலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும், நெட்டிசன்களும் நாடகமும், நிஜமும் என்ற தலைப்பில் அண்ணாமலையின் இந்த போட்டோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தி.மு.க.வினருக்கு சவுக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த போட்டோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Annamalai is real and not REEL.