அன்றே கணித்த அண்ணாமலை… இருளில் மூழ்கிய தமிழகம்!

அன்றே கணித்த அண்ணாமலை… இருளில் மூழ்கிய தமிழகம்!

Share it if you like it

தமிழகத்தில் அணில்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதால், இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது தமிழகம். நேற்று இரவு மட்டும் சுமார் 6 மணி நேரம் மின்வெட்டு நீடித்ததால் இருளில் மூழ்கியது தமிழகம். நீண்ட மின்தடையால் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2006 முதல் 2011-ம் ஆண்டுவரை இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. காரணம், தி.மு.க. ஆட்சியில் இருந்த இந்த காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் கடுமையான மின்தடை நிலவியது. ரசிகர்கள் டிரான்ஸ்ஃபார்மர்களில் ஏறி நின்று விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளித்ததெல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள். கடுமையான மின் தட்டுப்பாட்டால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். விவசாயம் செய்திருந்த விவசாயிகளின் பயிர்கள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகிப் போயின. இது மட்டுமா? தொடர் மின் தட்டுப்பாட்டால் தொழிற்சாலை போன்ற நிறுவனங்கள், உற்பத்தி செய்ய முடியாமல் இழுத்து மூடப்பட்டன.

இதற்கு காரணம், பி.ஜி.ஆர். போன்ற தரமற்ற நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் வழங்கியதுதான் என்று கடந்த மாதம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அப்போது, தற்போது மீண்டும் பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் கொடுத்திருப்பதால், தமிழகம் நடப்பு தி.மு.க. ஆட்சியிலும் மின்தடை ஏற்படும் என்று அடித்துக் கூறியிருந்தார். அண்ணாமலை அன்று சொன்னது இன்று அப்படியே நடந்து வருகிறது. அதேபோல, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம், தொடர் மழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிவந்தார்.

மழை காலம் முடிந்த பிறகும் மின் தடை தொடர்ந்தது. இது குறித்து செந்தில்பாலாஜியிடம் கேட்டதற்கு, மின் கம்பிகளில் அணில்கள் கதகளி ஆடுவதால் மின்தடை ஏற்படுவதாகக் கூறியிருந்தார். இதுதான் மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. செந்தில்பாலாஜிக்கு அணில் என பட்டப்பெயர் சூட்டிய நெட்டிசன்கள், சமூக வலைத்தளங்களில் அணில் படத்தை போட்டு செந்தில் பாலாஜியை கலாய்த்து வந்தனர். இதனிடையே, கடந்த சில வாரங்களாகவே அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வந்தது. சுமார் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை நகரப்பகுதிகளில் அரை மணி நேரமும், கிராமப்புறப் பகுதிகளில் 1 மணி நேரமும் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் தி.மு.க. அரசு மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில்தான், நேற்று இரவு திடீரென 6 மணி நேரம் வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இரவு முழுவதும் மக்கள் தூக்கத்தைத் தொலைத்து விட்டு, மொட்டை மாடிகளில் உலா வந்த சம்பவங்கள் அரங்கேறியது. இதற்கு தமிழக அரசும், செந்தில் பாலாஜியும் என்ன விளக்கம் சொல்லப்போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. என்ன, வழக்கம்போல மத்திய அரசு மீது பழியைத் தூக்கிப் போடுவார்கள். அதேசமயம், அணில் படத்தைப் போட்டு தமிழகம் முழுவதும் அணில்களின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. இருண்ட காலத்தை நோக்கி தமிழகம் சென்ற கொண்டிருக்கிறது என்று தமிழக அரசையும், செந்தில்பாலாஜியையும் கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக பல மறைக்கப்பட்ட வரலாறுகள், சொல்லப்படாத உண்மை செய்திகள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மீடியான் பெருமை கொள்கிறது. இப்பணி சிறப்பாக, தரமாக தொடர உங்கள் ஆதரவு அவசியம். மீடியான் குடும்பத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கரம் சேர்ப்போம்.

blank


Share it if you like it