ஈ.வெ.ரா. சின்னவரப்பட்டி ராமசாமியாம்!

ஈ.வெ.ரா. சின்னவரப்பட்டி ராமசாமியாம்!

Share it if you like it

திராவிடக் கழத்தின் நிறுவனத் தலைவர் ராமசாமியின் சொந்த ஊர் ஈரோடு இல்லை என்கிற புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

திராவிடர் கழகத்தை நிறுவியவர் ஈரோடு வெ.ராமசாமி. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட இவர், பிராமண எதிர்ப்பையும் குறிக்கோளாகக் கொண்டனர். ஹிந்தி எதிர்ப்புக்கு வித்திட்டவரும் இவர்தான். ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழை சனியன் என்றும் கூறியவர். இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் விடுதலை கொடுக்கக் கூடாது என்றும், அப்படியே கொடுத்தாலும் மெட்ராஸ் மாகாணம் ஆங்கிலேயர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் சொன்னவர்.

இளைஞர்கள் முதல் பெரிய பெரிய தலைவர்கள் வரை இந்திய சுதந்திரத்துக்காக போராடியபோதும், இவர்கள் ஒரு விடுதலைப் போராட்டத்திலும் கலந்து கொண்டது கிடையாது. ஆனால், விடுதலை என்கிற பெயரில் பத்திரிகையை மட்டும் நடத்தினார். இவரது கடவுள் மறுப்புக் கொள்கையையும், இவரது சித்தாந்தத்தையும்தான் இன்றைய தி.மு.க. அரசு கடைப்பிடித்து வருகிறது. எதற்கெடுத்தாலும் பெரியார் என்று தூக்கி முன்னிறுத்தி வருகிறார்கள். இவரது சொந்த ஊர் ஈரோடு என்றும், ஆகவே ஈரோடு வெ.ராமசாமி என்றும் சுருக்கி ஈ.வெ.ரா. என்று அழைத்து வருகிறார்கள். ஆனால், ஈரோடு ராமசாமியின் பூர்வீகம் ஈரோடு அல்ல என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஆம், இது தொடர்பாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளர் காஜா ஷெரீ்ப் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பி இருக்கிறார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- “பெரியார் என்று அழைக்கப்படும் ஈரோடு வெ.ராமசாமி, 1879-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி ஈரோட்டில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இவரது இயற்பெயர் ராமசாமி. இவரது தந்தை பெயர் வெங்கட் நாயக்கர், தாயார் பெயர் சின்னதாயம்மை. இவருக்கு கிருஷ்ணசாமி என்ற ஒரு சகோதரரும், கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி என இரு சகோதரிகளும் உண்டு. இதனால், ஈரோடு வெ.ராமசாமி என்று அழைக்கப்படுகிறார்.

ஆனால், உண்மையில் ராமசாமியின் பூர்வீகம் கரூர் மாவட்டம் அரவக்குறி்ச்சி தொகுதியில் இருக்கும் சின்னவரப்பட்டிதான். இங்கிருந்து பிழைப்புத் தேடித்தான் அவரது பெற்றோர் ஈரோடு சென்றிருக்கிறார்கள். ஆனால், என்ன காரணத்தினாலோ அன்று முதல் இன்று வரை ராமசாமியின் பூர்வீகம் ஈரோடு என்றே அனைவரும் சொல்லி வருகின்றனர். இது தவறு. சின்னவரப்பட்டியில் ராமசாமி குடும்பத்திற்குச் சொந்தமான வீடு மற்றும் தோட்டங்கள் எல்லாம் இன்றும் அப்படியே இருக்கிறது. அங்கு சென்று விசாரித்தால் இதை தெரிந்து கொள்ளலாம். இதை நான் நேரில் சென்று விசாரித்து, ஆதாரங்களை திரட்டி இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மனுவை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கொடுக்க முயன்றிருக்கிறார் காஜா ஷெரீப். ஆனால், அண்ணா அறிவாலயத்தில் இருந்தவர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவை அனுப்பும்படி சொல்லி இருக்கிறார்கள். அதன்படி, காஜாவும் மனுவை அனுப்பி இருக்கிறார். ஓரிரு நாளில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தபால் மூலம் பதில் வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து காஜாவை தொடர்புகொண்டு பேசிய அதிகாரிகள், மனு தொடர்பாக துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேசுவார்கள் என்று கூறியிருக்கிறார்கள். எனினும், யாரும் தொடர்புகொள்ளாத நிலையில், சமீபத்தில் சின்னவரப்பட்டிக்குச் சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள் அரசு அதிகாரிகள் சிலர்.

ஆக மொத்தத்தில் திராவிடக் கழகத்தினர் சொல்வது எல்லாமே பொய் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


Share it if you like it