ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்பதை பகீரங்கமாக அமைச்சர் ஒப்புக் கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
படித்தவர்கள், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என பலர் ஆன்லைன் ரம்மி (சூதாட்டம்) விளையாட்டில் தங்களது பணத்தினை இழந்துள்ளனர். இதன்காரணமாக, மனம் உடைந்த பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, அக்., 3 – ஆம் தேதி அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இதற்கு, அக்., 7 -ல் ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். அந்த வகையில், அக்., 19-ல் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
நவ., -17 -ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால், அதனை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக, அச்சட்டம் காலாவதியானது என்பதே நிதர்சனம். இதனையெல்லாம், மறைத்து விட்டு ஆளுநர் ரவி மீது விடியல் அரசு வீண் பழியை சுமத்தியது தான் கொடுமையிலும் கொடுமை.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை விடியல் அரசிற்கு முன்வைத்து இருந்தார்.
பா.ஜ.க. தலைவர் ட்விட்டர் பதிவு இதோ.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பு என்ற திறனற்ற தி.மு.க. அரசின் நாடகத்தை அம்பலப்படுத்த பா.ஜ.க. கடமைப்பட்டுள்ளது. செப்டம்பர் 26: ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு முதல்வர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அக்டோபர் 3: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. அதனுடன் ஆன்லைன் விளையாட்டிற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 7: தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
அக்டோபர் 19: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 17: அவசர சட்டத்திற்கு இன்னும் அரசாணை வெளியிடாததால் அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு நமது கேள்விகள்.
1. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பிறகு, தமிழக அரசு அரசாணை ஏன் பிறப்பிக்கவில்லை?
2. அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்த, “தமிழ்நாடு கேமிங் அதாரிட்டி” உருவாக்கப்பட வேண்டும். இன்றுவரை உருவானதா?
3. அக்டோபர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை ஆன்லைன் சூதாட்டத்தினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, மாநில அரசு அரசாணையை அறிவிக்கத் தவறியதாலும், அது காலாவதியாகும் வரை காத்திருந்ததாலும், ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்பதை பகீரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இச்சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விவரங்களுக்கு அமைச்சர் பேசிய காணொளியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.