தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று தி.நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக கவர்னராக இருக்கும் ஆர்.என். ரவி, அடிக்கடி கோயில்களுக்கு விஜயம் செய்து, சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று தி.நகரிலுள்ள முப்பாத்தம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கவர்னரின் தனிப்பட்ட பயணம் இது என்பதால், பெரிய அளவில் எவ்வித கெடுபிடிகளோ அல்லது புரொட்டகால்களோ இல்லை. கோயிலுக்கு வந்த கவர்னரை, நல்லி குப்புசாமி செட்டியார் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண கான சபாவின் செயலாளர் ஒய். பிரபு ஆகியோர் வரவேற்றனர்.
வடமாநிலத்தில் பிறந்த ஒருவர், அதுவும் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், இது போன்ற சிறு கோயில்களுக்கு விஜயம் செய்வது, அரிதிலும் அரிது. அப்படி இருக்க, கவர்னர் ரவி இது போன்ற சிறு கோயில்களுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்வதின் மூலம், தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்துடன், கவர்னர் ரவி தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருப்பதை, நம்மால் உணர முடிகிறது. மேலும், இது போன்ற சிறு சிறு நிகழ்வுகளை, கவர்னர் வெளிப்படுத்துவதன் மூலமாக, நாம் அனைவருமே ஒன்று, நமக்குள் எவ்வித சச்சரவுகளுக்கும் இடம் இல்லை என, மக்கள் மத்தியில் கோடிட்டு காட்டுகிறார்.