தமிழகத்தில் புதிய தொழில்கள் எதுவும் தொடங்கப்படாததால், ஜி.எஸ்.டி. வரி வசூல் வளர்ச்சி விகிதம் பெரும் சரிவை சந்தித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவைகள் வரி வசூல் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம்வரை ஜி.எஸ்.டி. வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயைக் கடந்திருந்தது. இது 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிட 13 சதவிகிதம் அதிகமாகும். ஆனால், தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் வளர்ச்சி விகிதம் சரிவடைந்து வருகிறது. குறிப்பாக, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ஜி.எஸ்.டி. வரி வசூல் விகிதம் குறைந்திருக்கிறது.
உதாரணமாக, 2020 டிசம்பர் மாதத்தில் தமிழகத்தின் ஜி.எஸ்.டி. வரி வசூல் 6,905 கோடியாக இருந்தது. இதே 2021 டிசம்பர் மாதத்தில் 6,635 கோடியாக சரிவடைந்து விட்டது. இது 4 சதவிகித சரிவாகும். அதேசமயம், 2022 பிப்ரவரி மாத நிலவரப்படி, தமிழகத்தின் ஜி.எஸ்.டி. வரி வசூல் 7,393 கோடி ரூபாய். இது வெறும் 5 சதவிகித வளர்ச்சி மட்டுமே. இதே அண்டை மாநிலங்களான கர்நாடகா 21 சதவிகித வளர்ச்சியையும், ஆந்திரா 19, கேரளா 15, தெலங்கானா 13, பாண்டிச்சேரி 15 சதவிகித வளர்ச்சியையும் எட்டி இருக்கின்றன. ஆகவே, இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.