ரூ.10 லட்சம் கேட்டு ‘ஜிம்’மை சூறையாடிய தி.மு.க.வினர்!

ரூ.10 லட்சம் கேட்டு ‘ஜிம்’மை சூறையாடிய தி.மு.க.வினர்!

Share it if you like it

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் ஒருவரின் உடற்பயிற்சிக் கூடத்தை தி.மு.க.வினர் சூறையாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் அராஜகத்துக்கு பெயர் போனவர்கள் தி.மு.க.வினர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆட்சியில் இல்லாதபோதே, பஜ்ஜிக் கடையில் தகராறு, டீக்கடையில் கும்மாங்குத்து, ஓசி பிரியாணி கேட்டு பாக்ஸிங், பியூட்டி பார்லரில் பெண்ணுக்கு உதை, தேங்காய் கடையில் பெண்ணுக்கு பளார், கடப்பாக் கல் திருட்டு என பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றியதை தமிழகமே அறியும். அனைத்து வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சந்தி சிரித்தது. இந்த சூழலில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் நிலையில், அக்கட்சியினரின் அராஜகம் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. கட்டப்பஞ்சாயத்து, பாலியல் பலாத்காரம், ரவுடியிஸம் என பல்வேறு அட்டகாசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான், 10 லட்சம் ரூபாய் கேட்டு தனியார் ஒருவரின் உடற்பயிற்சிக் கூடத்தை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி, வானாபுரம் அடுத்த பகண்டை கூட்டுரோடு சின்னக்கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன், முனியசாமி. இருவரும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் சேர்ந்து வானாபுரம் பகுதியில் 20 சென்ட் இடத்தை வாங்கி இருக்கிறார்கள். அந்த இடத்தின் முன்பகுதியில் சுமார் 5 சென்ட் இடத்தில் சுப்பிரமணியின் சம்மதத்துடன் உடற்பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து நடத்தி வந்திருக்கிறார் முனியசாமி. இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முனியசாமியிடம் வந்த சுப்பிரமணி, இடத்தின் முன்பகுதியை தனக்கு ஒதுக்கக் கோரி, வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக இருவருக்கும் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தி.மு.க. பிரமுகர்களான அய்யனார், விஜயகுமார், கதிர்வேல் ஆகியோர் வந்து 10 லட்சம் ரூபாய் கேட்டி மிரட்டி இருக்கிறார்கள். இதற்கு முனியசாமி மறுத்து விட்டதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மூவரும் ஆட்களுடன் வந்து முனியசாமியின் உடற்பயிற்சிக் கூடத்தை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முனியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Share it if you like it