உண்மை செய்திகளை மக்களிடம் இருந்து மறைக்கும் ஊடகங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை கைப்பற்றிய பின்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம். மேலும், கோவையில் காணாமல் போன சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு என பள்ளி மாணவிகளுக்கும், பெண்களுக்கும், பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றி வருகிறது என்பது பலரின் குற்றச்சாட்டு.
அதே போல, அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகானந்தம் மகள் லாவண்யா. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைகேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். சிறந்த மாணவியாகத் திகழ்ந்த லாவண்யாவை, தங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என்று அப்பள்ளியின் ஆசிரியர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு, மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், மிக கடுமையான டார்ச்சர் அவருக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் கடும் மன அழுத்தத்தில் இருந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து, 22 வயது உடைய இளம் பெண் மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவரை, தி.மு.க.வை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு பேர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக, தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதுபற்றி, மக்களிடம் எடுத்துக்கூற வேண்டிய ஊடகங்கள், ஆளும் கட்சியின் ஊதுகுழலாக மாறியுள்ளது என்பதே நிதர்சனம்.
இந்நிலையில், உண்மை செய்திகளை மக்களிடம் இருந்து மறைக்கும் ஊடகங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். பா.ஜ.க ஆளும் மாநிலம், மத்திய அரசு என்றால் உடனே அலறி அடித்துக் கொண்டு கருத்து கூறும் நெறியாளர் செந்தில், சன் நியூஸ் குணசேகரன், புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மற்றும் கார்த்திக்கை செல்வன் உட்பட யாரும் விருதுநகர் சம்பவம் குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.