தமிழக அரசு இன்னும் மீட்புப் பணியை ஆரம்பிக்கவே இல்லை, ஆனால் அதற்குள் 3.5 கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாக கணக்குக் காட்டி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
உக்ரைனில் போர் நடந்துவரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, இந்தியா அழைத்து வரப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சியவர்களையும் மீட்க துரித கதியில் பணி நடந்து வருகிறது. அதாவது, உக்ரைன் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் இந்தியர்களை டெல்லிக்கு அழைத்து வந்து, அங்கிருந்து அவரவர் மாநிலங்களுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மீனாம்பாக்கம் விமானநிலையத்தை வந்தடைகின்றனர்.
இதனிடையே, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்பதற்காக, 3 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ. மற்றும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தது தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு. இந்தக் குழு டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துவிட்டு வந்ததோடு சரி, மற்றபடி எந்தப் பணியிலும் ஈடுபடவில்லை. அதிகபட்சமாக, டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். ஆனால், ஏதோ இவர்கள்தான் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று, தமிழர்களை அழைத்து வந்ததுபோல, சமூக வலைத்தளங்களில் பில்டப் காட்டி வருகின்றனர்.
இதைவிட வேடிக்கை என்னவென்றால், உக்ரைன் மாணவர்களை மீட்க தி.மு.க.தான் பஸ்களை ஏற்பாடு செய்து, அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைத்து அழைத்து வருவதுபோல கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், உக்ரைன் மாணவர்களை மீட்பதற்காக இதுவரை 3.5 கோடி ரூபாய் செல்வழிக்கப்பட்டிருப்பதாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியிருப்பதுதான். இதைக் கேட்டு தமிழக மக்கள் மயக்கம் வராத குறையாக கிறுகிறுத்துப் போய்க் கிடக்கிறார்கள். மேலும், காமெடி நடிகர் வடிவேலு படத்தில் வரும் டயலாக் போல, ‘இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள அலப்பறையப் பாரு’, தமிழக அரசு இன்னும் மீட்புப் பணிகளை ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் 3.5 கோடி ரூபாய் செலவழித்திருப்பதாக கணக்குக் காட்டி இருக்கிறார்கள். அப்படி இருக்க மீட்புப் பணி முடியும்போது, இன்னும் எத்தனை கோடி ரூபாய் கணக்குக் காட்டுவார்களோ என்ற அதிர்ச்சியில் இருக்கிறார்கள் மக்கள். தமிழக அரசின் இச்செயல்பாடுகளை நெட்டிசன்களும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.