பொள்ளாச்சி குலுங்க… குலுங்க..!

பொள்ளாச்சி குலுங்க… குலுங்க..!

Share it if you like it

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பா.ஜ.க. மாநாட்டால் பொள்ளாச்சி குலுங்கியது.

கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. மாநாடு பொள்ளாச்சியில் நேற்று இரவு நடந்தது. இதற்காக தமிழக சட்டசபை போன்று மேடை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், மோடி அரசின் 8 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில் ‘வள்ளிக் கும்மி’ ஆட்டம் நடந்தது. நிகழ்ச்சியை ஒட்டி, மாலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் குவியத் தொடங்கி விட்டனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இளைஞரணியினர் ஈடுபட்டனர். கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்காக 25,000 சேர்கள் போடப்படிருந்த நிலையில், அவை அனைத்தும் நிரம்பி வழிந்த நிலையில், 10,000-க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டே நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில், 11 கோடி பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். மேலும், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார். திருமணம் முதல் சொத்துப் பங்கீடு வரை அனைத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஓராண்டில், 6,600 மருத்துவ பணியிடங்களை உருவாக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கவுரவம் கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில், முத்ரா கடனில் 36 லட்சம் பேருக்கு சிறு, குறு கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

கோட்டை வடிவில் மேடை... 25 பாஜக எம்.பி-க்கள் நிச்சயம்' - பொள்ளாச்சி  கூட்டத்தில் அண்ணாமலை | Annamalai targets for 2024 parliament election,  pollachi meeting highlights

2014-க்கு பிறகு கொப்பரைக்கு ஆதார விலை கொண்டு வந்தது பா.ஜ.க. அரசுதான். கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலை, கிலோவுக்கு 150 ரூபாயாக உயர்த்தப்படும். பா.ஜ.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் தென்னை நார் வாரியம் துவங்கப்பட்டிருக்கிறது. 2016-ல் தென்னை நார் பொருட்கள் வாயிலாக, 1,200 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்திருக்கிறது. இதை, தற்போது 3,900 கோடியாக உயர்த்தி இருக்கிறோம். இங்குள்ள விவசாயிகளை காக்க ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். பொள்ளாச்சியை தலைமையிடாகக் கொண்டு மாவட்டம் உருவாக்கப்படும். தமிழகத்தில் கூட்டு பலாத்கார சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. கருமுட்டை விற்பனை உட்பட புதுவித குற்றங்கள் நடக்கின்றன. மாநிலம் இப்படி இருக்கையில், உ.பி. வரையில் ஸ்டாலின் அலை வீசுகிறது என்று காமெடி செய்கின்றனர். 2024-ல் இந்தியாவின் துணை பிரதமராகலாம் என கனவு காண்கின்றனர். தடுப்பூசிக்கான 5 மருந்துமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

image

தடுப்பூசியை வி.ஐ.பி. என்றில்லாமல் அனைவருக்கும் சமமாக பாரபட்சமின்றி செலுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பிரச்னைக்கு பிறகு பா.ஜ.க.வுக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது. பா.ஜ.க. மத ரீதியான கட்சி என்று தி.மு.க., பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறது. ஸ்டாலின் முதல்வரான பிறகு நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். 9 மாதங்களாகியும் ஒரு முதல்வர் கூட பதில் கடிதம் அனுப்பவில்லை.

கோவையில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் மருத்துவம் படிக்கிறார். தேனியில் பூக்கள் விற்பனை செய்த பெண் அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்கிறார். தி.மு.க.வை தாண்டி வேறு யாரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. காயர் தொழிலை பாதுகாக்க பா.ஜ.க. நடவடிக்கை எடுத்து வருகிறது. இல்லம் தேடி கல்வித் திட்டம் மத்திய அரசு துவங்கி, 800 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கி இருக்கிறது. மத்திய அரசு திட்டத்துக்கு தி.மு.க. பெயர் வைக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில் தி.மு.க. சிறந்து விளங்குகிறது.

image

பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதையறிந்த தி.மு.க., கச்சத்தீவை மீட்போம் என்று நாடகமாடுகிறது. உலகின் படைகளில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. இதை முதல் இடத்துக்கு கொண்டு வரத்தான் அக்னிபத் திட்டம். பல பாதுகாப்பு படை பிரிவுகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியை விட 3 மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை தி.மு.க.வினர் கேரளாவுக்கு மொத்தமாக விற்று விட்டனர்.

கவுண்டர் (@Muruges47101792) / Twitter

பொள்ளாச்சியில் இருந்து நாளொன்றுக்கு 7,000 லோடு மண்ணை ஒரு தனியார் நிறுவனம் கேரளாவுக்கு கடத்துகிறது. மண் வளத்தை காக்க கேரளாவில் மண் எடுக்க அந்த மாநில அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால், நமது மண்ணை கேரளாவுக்கு விற்கின்றனர். மண் கடத்தலை எந்த அரசு அதிகாரிகளும் தடுப்பதில்லை. தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் போலீஸைரை செயல்படவிடாமல் கைகளை கட்டியுள்ளனர். கனிம வளங்கள் கொள்ளையை தடுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கேரளாவுக்கு மண் கொண்டு செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சிறைப்பிடிப்போம்” என்றார்.


Share it if you like it