‘அவங்க அப்பன் வீட்டு பஸ்ஸா…!’ ஸ்டாலினை பஞ்சராக்கிய பெண்!

‘அவங்க அப்பன் வீட்டு பஸ்ஸா…!’ ஸ்டாலினை பஞ்சராக்கிய பெண்!

Share it if you like it

ஸ்டாலின் பஸ்ஸாமுல்ல ஸ்டாலின் பஸ்ஸு…. அவங்க அப்பன் வீட்டு பஸ்ஸா என்று ஒரு பெண்மணி, ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஸ்டாலின்தான் வாறாரு விடியல் தரப் போறாரு’ என்று சொல்லி தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது தி.மு.க. ஆனால், தமிழகத்துக்கு விடியல் வந்ததோ இல்லையோ தமிழகம் முழுவதும் இருண்டு கிடக்கிறது என்பதுதான் பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அந்தளவுக்கு தமிழகம் முழுவதும் மின்தடை நிலவுகிறது. அதேபோல, தமிழகத்தில் ரவுடியிசம், கொலை, கொள்ளைகளும் அதிகரித்திருக்கின்றன. இந்த சூழலில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று நேற்று ஓராண்டு நிறைவு செய்தது. இதை தி.மு.க.வினர் ஆகா ஓகோவென்று கொண்டாடினார்கள். அதேசமயம், மற்றவர்கள் தி.மு.க. அரசை கழுவிக் கழுவி ஊற்றினார்கள் என்பது வேறு கதை. நெட்டிசன்களும், எதிர்க்கட்சியினரும் ஒன்றையும் கிழிக்காத ஓராண்டு என்று ஹேஷ்டேக் போட்டு வெளுத்து வாங்கி விட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார் ஸ்டாலின். அதேபோல, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதியின்படி பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் அறிவிக்கப்பட்டது.. இந்த சூழலில், பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி தமிழக உள்ளாட்சித் துறை சார்பில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா செங்காடு கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, கிராமசபைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின், அங்கு கூடியிருந்த பெண்களிடம் ஸ்டாலின் பஸ்ஸில் சென்றீர்களா? என்று கேட்டார். அதற்கு பெண்களும் இலவசமாக பயணம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில், தி.மு.க. அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்திருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு மரியாதைச் செலுத்த காரில் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, தி.மு.க.வினர் வழக்கமாக அரங்கேற்றும் நாடகத்தை நடத்தினர். அதாவது, ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்டாலின் திடீரென காரில் இருந்து இறங்கி, அவ்வழியாக வந்த பஸ்ஸில் ஏறி பயணித்தார். அப்போதும், பெண்களிடம் பஸ் பயணம் குறித்து கேட்ட ஸ்டாலின், கண்டக்டரிடமும் சில விஷயங்களை கேட்டறிந்தார். ஆனால், இந்த நிகழ்வுகள் அனைத்தும் பக்காவாக வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவவிடப்பட்டது. இதிலிருந்து இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்பது கண்கூடு.

இது இப்படி இருக்க, ஸ்டாலின் பஸ் என்று கூறியதை வெளுத்து வாங்கி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர். அதாவது, தி.மு.க. அரசின் ஓராண்டு ஆட்சி எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக தனியார் யூடியூப் சேனல் நிறுவனம் ஒன்று பொதுமக்களிடம் பேட்டி கண்டது. அப்போது, சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்டு விட்டார். இதுகுறித்துப் பேசிய அப்பெண்மணி, “ஸ்டாலின் பஸ்ஸில் பயணம் செய்தீர்களா? என்று கேட்கிறார் ஸ்டாலின். இது என்ன அவங்க அப்பன் வீட்டு பஸ்ஸா? அரசாங்க பஸ். அதோடு, குறிப்பிட்ட சில சாதாரணக் கட்டண நகர்ப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்து விட்டு, எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் உள்ளிட்ட பேருந்துகளின் கட்டணத்தை ஏற்றி விட்டார் ஸ்டாலின்.

தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு வர முதலில் சாதாரணப் பேருந்துகளில் 13 ரூபாய் டிக்கெட் கட்டணமாக இருந்தது. இதே எக்ஸ்பிரஸ் பஸ் என்றால் 15 ரூபாய் டிக்கெட். ஆனால், தற்போது, சாதாரண பேருந்தில் 29 ரூபாயும், எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் 39 ரூபாயும் என கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். எடப்பாடியார் ஆட்சியில் இப்படி அநியாயமாகவா கட்டணத்தை உயர்த்தினார்கள். அதேபோல, தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருக்கிறது. கோதுமையில் ஏகப்பட்ட குப்பை இருக்கிறது. அதோடு, எடப்பாடி ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் பணமும் கொடுத்தார்கள். அப்போது, 5,000 ரூபாயாக கொடுக்க வேண்டியதுதானே என்று கேட்டார் ஸ்டாலின். தற்போது இவரது ஆட்சியில் என்ன கொடுத்தார்? 21 பொருட்கள் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு பல்லி விழுந்த புளி, பாகுபோல கருப்பட்டி என அனைத்தும் தரமற்ற பொருட்களாக இருந்ததுதான் மிச்சம். மேலும், மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு வழங்கப்பட்ட பணம் எங்கே போச்சு? அவங்க அப்பா சமாதி கட்டுறதுக்கா கொடுத்தாங்க. ஏழை எளிய மக்களுக்கு தரமான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யத்தானே கொடுத்தாங்க” என்று வெளுத்து எடுத்து விட்டார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it