ஆண்டுதோறும் 2 லட்சம் பேரை கொல்லும் டாஸ்மாக் சாராயம் – ராமதாஸ் வேதனை !

ஆண்டுதோறும் 2 லட்சம் பேரை கொல்லும் டாஸ்மாக் சாராயம் – ராமதாஸ் வேதனை !

Share it if you like it

தமிழகத்தில் டாஸ்மாக்கினால் பல குடும்பங்கள் நடுரோட்டில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சென்னை மேடவாக்கத்தில் கல்லூரி முன்பு மது குடித்துவிட்டு போதை ஆசாமிகள் கல்லூரி வரும் மாணவிகளிடமும் ஆசிரியைகளிடமும் ஆபாசமாக பேசுவது, விசிலடிப்பது என அட்டுழியம் செய்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழக அரசு டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று பாஜக பாமக தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மக்களைவிட பணம்தான் முக்கியம் என்று டாஸ்மாக்கை மூடாமல் மதுபானத்திலேயே 90 ml மதுபாட்டில் என்று புதிய ரகத்தை கொண்டு வருகின்றனர். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்காமல் மக்களை நிர்மூலமாக்கும் நிலைக்கு கொண்டு செல்லவே திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திமுக அரசை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேரை கொல்லும் டாஸ்மாக் சாராயம் மட்டுமின்றி, அவ்வப்போது கொத்துகொத்தாக மக்களைக் கொல்லும் கள்ளச்சாராயமும் தலைவிரித்தாடுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் கறுப்பிட்டிருப்பதாவது :-

‘குடி’அரசு

எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது

இந்தியா என்ற ‘குடி’அரசு நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று போராடியதன் பயனாக, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவுக்கு விடுதலை அளித்த ஆங்கிலேயர்கள், நம்மை மகிழ்ச்சியாக இருக்கும்படி கூறிவிட்டு வெளியேறினார்கள்.

விடுதலை மட்டும் போதாது, மக்களை மக்களே ஆளும் நிலை வரவேண்டும் என்ற நோக்குடன் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்தியாவை ‘குடி’அரசு நாடாக நமது தலைவர்கள் அறிவித்தார்கள்.

குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது.

குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு.

குடியரசு என்றால் குழந்தைகள் வரை குடிக்கப் பழக்கும் அரசு.

குடியரசு என்றால் சந்துபொந்து விடாமல் எல்லா இடங்களிலும் மதுக்கடைகளை திறந்து மக்களை குடிக்கச்சொல்லும் அரசு என்பது இப்போதுதான் புரிகிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேரை கொல்லும் டாஸ்மாக் சாராயம் மட்டுமின்றி, அவ்வப்போது கொத்துகொத்தாக மக்களைக் கொல்லும் கள்ளச்சாராயமும் தலைவிரித்தாடுகிறது.

கேட்டால் அதில்தான் கிக் இருப்பதாக கூறுகிறார் ஒரு மூத்த அமைச்சர்.

என்னவோ, மதுவுக்கு அடிமையான மக்கள் நிறைந்த தமிழ்நாட்டில் பணி செய்வது எமனுக்குதான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *