சிறுமி பலாத்காரம்: கவுஸ் பாஷா கைது!

சிறுமி பலாத்காரம்: கவுஸ் பாஷா கைது!

Share it if you like it

தெலங்கானா மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இஸ்லாமிய இளைஞர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம் சூர்யபேட்டை மாவட்டம் கோடாட் பகுதியைச் சேர்ந்தவர் பாஷா. அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த இவர், சூர்யபேட்டை நகராட்சியின் வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரது மகன் கவுஸ் பாஷா. அதே பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது, கவுஸ் பாஷாவும், அவரது நண்பர் சாய்ராம் ரெட்டி என்பவரும் அப்பெண்ணை ஆட்டோவில் கடத்திச் சென்றிருக்கிறார்கள். பின்னர், ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்றவர்கள், அங்கு அப்பெண்ணை அடைத்து வைத்து, போதை மருத்து செலுத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

அப்பெண் நேற்று மயக்கம் தெளிந்த நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்று தனது தாய்க்கு தகவல் கொடுத்திருக்கிறார். பின்னர், உறவினர்கள் மூலம் அப்பெண் மீட்கப்பட்டு, போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இருவர் மீதும் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை கோடாட் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து கோடாட் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ராவ் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட வார்டு கவுன்சிலர் பாஷாவின் மகன் முகமது கவுஸ் பாஷா மற்றும் அவரது நண்பர் சாய்ராம் ரெட்டி ஆகியோரை போலீஸார் கைது செய்திருப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, தெலங்கானா மாநிலத்தில் சமீபகாலமாக பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்தவரும் நிர்மல் நகராட்சி துணைத் தலைவருமான ஷஜித் கான் என்பவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு கவுன்சிலரின் மகன் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி இருக்கிறார். ஆகவே, பெண்கள் பாலியல் பலாத்காரத்தை கண்டித்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி நடந்தது.

அதேசமயம், இச்செய்தி தெலங்கானா மாநிலம் உட்பட எந்த மாநிலத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை என்பதுதான் ஹைலைட். இதே பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த கவுன்சிலர் மகனோ, அல்லது உறவினரோ இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருந்தால், இந்நேரம் மீடியாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு விவாதம் நடத்தி இருக்கும். இச்செய்தியை ஊதிப் பெரிதாக்கி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கச் செய்திருப்பார்கள். பா.ஜ.க.வைச் சாராத கட்சி என்பதால் இச்செய்தி மீடியாக்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. போலி போராளிகளும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இதிலிருந்து தமிழகம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக எவ்வாறெல்லாம் விஷத்தை கக்குகிறார்கள் என்பது புலனாகிறது.


Share it if you like it