தெலங்கானாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏற்றப்பட்டிருந்த தீபத்தை எட்டி உதைத்து, ஹிந்து குடும்பத்தினரை மதம் மாறிய கிறிஸ்தவ குடும்பத்தினர் செருப்பால் தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாகவே, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸிலீம்களில் பல பிரிவினர் உண்டு. அந்தவகையில், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் ஹிந்துக்களுடன் இணைக்கமாக வாழ்பவர்கள். பெரும்பாலும் இவர்களால் ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை. அதேசமயம், ஹிந்துக்களாக இருந்து சமீப காலங்களில் கிறிஸ்தவர்களாகவோ அல்லது இஸ்லாமியர்களாகவோ மதம் மாறியவர்கள்தான் ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள்தான் ஹிந்துக்களை விரோத மனப்பான்மையில் பார்ப்பவர்கள். ஹிந்து தெய்வங்களை நிந்திப்பதும் இவர்கள்தான்.
அந்த வகையில், மதம் மாறிய கிறிஸ்தவ குடும்பம் ஒன்று தீபாவளி பண்டிகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தீபத்தை எட்டி உதைத்து அவமானப்படுத்தியதோடு, ஹிந்து குடும்பத்தினரை செருப்பால் தாக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சந்திரசேகர ராவ் முதல்வராக இருக்கும் தெலங்கான மாநிலத்தில்தான் இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பல மதத்தினரும் வசித்து வருகின்றனர். அவரவர் மதப் பண்டிகையின்போது, அவர்களது வழக்கப்படி பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது வீட்டின் முன்பு ரங்கோலி கோளமிட்டு தீபமேற்றி வைத்திருந்தனர். ஆனால், எதிர் வீட்டில் குடியிருக்கும் கிறிஸ்தவ குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த பெண், ஹிந்து குடும்பத்தினர் ஏற்றி வைத்திருந்த தீபத்தை காலால் எட்டி உதைத்து தகராறில் ஈடுபட்டதோடு, தனது செருப்பை கழற்றி அக்குடும்பத்தினரை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹிந்து குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். இதனடிப்படையில், கிறிஸ்தவ குடும்பத்தினர் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.