இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி: பி.எஃப்.ஐ. கும்பல் கைது!

இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி: பி.எஃப்.ஐ. கும்பல் கைது!

Share it if you like it

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பைச் சேர்ந்த கும்பலை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத், ஜகிடியல், ஹைதராபாத், நெல்லூர், கர்னூல் மற்றும் கடப்பா ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான பி.எஃப்.ஐ.யின் செயல்பாடுகள் அதிகளவில் இருப்பதாக மாநில போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதாவது, இப்பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்களை தேர்வு செய்து, கராத்தே, குங்பூ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளையும், கொடிய ஆயுதங்களை கையால்வது குறித்தும் பி.எஃப்.ஐ. அமைப்பினர் பயிற்சி அளித்து வருகின்றனர். பின்னர், மேற்கண்ட இளைஞர்களை ஷரியா சட்டம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை புகுத்தி மூளைச்சலவை செய்து தேச விரோத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்பதுதான் போலீஸாருக்குக் கிடைத்த தகவல்.

இதையடுத்து, நிஜாமாபாத்தில் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஆட்டோநகர் பகுதியைச் சேர்ந்த 54 வயதான கராத்தே பயிற்றுவிப்பாளர் அப்துல் காதர் என்பவரின் வீட்டில் தெலுங்கானா போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டிலிருந்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கொடி, பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,000 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்பி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, அப்துல் காதரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், காதர் கொடுத்த தகவலின்படி குண்டாரம் பகுதியிலுள்ள ஷதுல்லா என்பவரின் வீட்டிலிருந்து பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த ஷேக் ஷாதுல்லா (40), முகமது இம்ரான் (22), முகமது அப்துல் மொபின் (27) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பிரிவு 120-ஏ (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் குற்றச் சதி), 120-பி (கடுமையான குற்றத்திற்கான கிரிமினல் சதி), 153-ஏ (இரண்டு வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை ஊக்குவித்தல்) மற்றும் 141 (சட்டவிரோதமான கூட்டம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, இந்திய தண்டனைச் சட்டம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் – 1967-ன் பிரிவு 13(1) (பி)யும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இவர்கள் யாருமே பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள் என்பதும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அந்தளவுக்கு மக்களுடன் மக்களாகக் கலந்து மெக்கானிக்குகள் போன்ற சிறு சிறு தொழிலாளர்களாகக் காட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால், ஜிஹாதிகளை உறுவாக்குவதையே முழுநேரத் தொழிலாக வைத்திருந்திருக்கிறார்கள். இவர்களது வீட்டிலிருந்தும் கத்தி, வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என்று நிஜாமாபாத் காவல்துறை ஆணையர் கே.ஆர்.நாகராஜு தெரிவித்திருக்கிறார். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக காதர் நடத்திய பயிற்சி முகாமில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 200 முஸ்லிம் இளைஞர்கள் மீதும் நிஜாமாபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும், இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மற்றவர்களை கைது செய்யவும் போலீஸ் குழுக்கள் முயற்சி செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share it if you like it