தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோமதி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆடித்தபசு திருவிழா நடைபெற்றுவருகிறது. கொராணாவை காரணம் காட்டி பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் தடை உத்தரவின் பேரில் கோயில் வாசல் பூட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் பள்ளிவாசல் மற்றும் பொது இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரை பக்ரீத் தொழுகை நடத்த அனுமதி அளித்திருந்தனர். இந்த பாரபட்சமான செயலை கண்டித்து,
“ஆலய நுழைவு போராட்டம்” என அறிவித்த இந்து முன்னணியினர் சங்கரன்கோவில் தேரடியிலிருந்து தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் இந்துமுன்னணி நிர்வாகிகள் 75 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சங்கரன்கோவில் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் கோவில் பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து வேதனையுடன் திரும்பி சென்றனர்.
#HinduMunnani #Sankarankovil pic.twitter.com/wI26c6SjJ6
— Voice Of Tamil (@imtamilvoice) July 23, 2021