பாடப்புத்தகம் தேசபக்தியை வளர்க்க வேண்டுமே தவிர சபல புத்தியை வளர்க்க கூடாது !

பாடப்புத்தகம் தேசபக்தியை வளர்க்க வேண்டுமே தவிர சபல புத்தியை வளர்க்க கூடாது !

Share it if you like it

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஹெபலில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில் 1947 முதல் 1962 வரையிலான காலக்கட்டத்தில் சிந்த் (Sindh) சமூக மக்களின் பிரிவினை மற்றும் இடம்பெயர்வு குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சிந்த் சமூகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களாக நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தமன்னா குறித்த தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், இது தொடர்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பெற்றோர் கூறுகையில், “நடிகை தமன்னா கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் கமர்ஷியல் படங்களில் நடித்துள்ளார். அப்படி இருக்கையில், எவ்வாறு குழந்தைகளின் ரோல் மாடலாக தமன்னா இருக்க முடியும்?

நீங்கள் இணையத்தில் தமன்னா குறித்து தேடினால் நிச்சயமாக சம்பந்தமில்லாத தகவல்களே கிடைக்கும். இதனால் குழந்தைகள் திசைமாறும் சூழலும் உள்ளது. எனவே, இது தொடர்பான பாடப் பகுதிகளை நீக்கச் சொன்ன பிறகும், பள்ளி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை” என்றனர்.

இதனால் அதிருப்தி அடைந்தபெற்றோர் கர்நாடக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்தில் புகார் அளித்தனர். அதில், “சம்பந்தப்பட்ட பாடம் மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் இருப்பதால், அதனை நீக்க வேண்டும்” என கோரியுள்ளனர். இந்நிலையில் சில பெற்றோர், தமன்னாபற்றிய பாடத்தை நீக்காவிட்டால் அந்தப் பள்ளியில் இருந்துதங்களது குழந்தைகளை வேறுபள்ளிக்கு மாற்றி விடுவதாக எச்சரித்துள்ளனர்.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா மற்றும் நடிகர் ரன்வீர் சிங் குறித்து இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாட புத்தகத்தில் கருணாநிதி :-

கடந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கருணாநிதி பற்றிய தகவல்களை பள்ளிக் கல்வித் துறை சேர்த்திருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வியின் 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த தகவல்கள் ‘பன்முகக் கலைஞர்’ என்ற தலைப்பில் பாடமாக சேர்க்கப்பட்டது.

பாட புத்தங்கங்களில் வரும் கருத்துக்கள் உண்மையான முறையிலும், நாகரிகமான முறையிலும் இருக்க வேண்டும். ஏனெனில் அதனை படித்து தான் எதிர்கால தலைமுறைகள் வாழ போகின்றனர். அப்படி இருக்கையில் அவர்களுக்கு போதிக்கும் கல்வி பாடத்திட்டத்தில் கருணாநிதி பற்றியும், தமன்னாவை பற்றியும் இருந்தால் மேலும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள இணையதளத்தை மாணவர்கள் தேடும் பொழுது எதிர் மறையான கருத்துக்கள் வந்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்.

பாட புத்தகங்களில் மாணவர்களுக்கு நல்ல சிந்தனைகளை வளர்க்கும் வகையில் பாடதிட்டங்கள் இருக்க வேண்டும். உதாரணமாக நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்டவர்கள் அப்துல் கலாம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என எண்ணற்றவர்களின் உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. அவர்களை பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். அதனை எல்லாம் விட்டுவிட்டு ஊழல் செய்தவர்கள், திரைப்படத்தில் கவர்ச்சியாக நடிப்பவர்கள் என மாணவர்களை தவறான வழியில் திசை திருப்பலாமா ?


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *