தமிழக அரசு கொரோன நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பல மாவட்டங்களுக்கு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் அடிப்படையில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வியாபாரம் செய்து வருகிறாரக்ள்.
அதை போல் கரூரில் ஜவுளிக்கடை நடத்திவருபவர்கள் கடைகள் திறக்க அனுமதி கேட்டு கடை உரிமையாளர்கள் பலர் கரூர் வர்த்தக சங்கம் சார்பாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை, சந்தித்துள்ளனர்.கடை திறப்பதை பற்றி அமைச்சர் அவர்களிடம் அனுமதி கேட்டு உள்ளனர்.அதற்கு வாய்மொழியாக அமைச்சர் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. அமைச்சர் வாக்குறுதியை நம்பி மக்கள் கடையை திறந்துள்ளனர்.
இது குறித்து, கரூர் நகராட்சி மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றுள்ளன.
பின்னர் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது, ‘அமைச்சர் கூறியபடியே கடைகள் திறக்கப்பட்டு உள்ளன என, சில கடைகளின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
அதையடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ளுமாறு, ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மாவட்ட நிர்வாகத்திடம் பேசியபோது, ‘எந்த தகவலும் எங்களுக்கு கூறப்படவில்லை. அரசு உத்தரவை மீறி செயல்பட்டதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பதிலளிக்கப்பட்டுள்ளது. பின்னர், விதிமுறை மீறி திறந்த கடைகளை மூடச்சொல்லி உத்தரவிடப்பட்டது.
மேலும், 10 கடைகளுக்கு , தலா 5,000 வீதம் 50 ஆயிரம், நான்கு கடைகளுக்கு , தலா 500 வீதம் 2,000 என, மொத்தம் 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.