தாலிபான்கள் குறித்து செய்தி வெளியிட்டால் பத்திரிக்கையாளர்களுக்கு மரண அடி..! மோடி, RSS-யை, விமர்சனம் செய்தால் இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு செழிப்பான வாழ்க்கை – பாக் சமூக ஆர்வலர் கருத்து..! 

தாலிபான்கள் குறித்து செய்தி வெளியிட்டால் பத்திரிக்கையாளர்களுக்கு மரண அடி..! மோடி, RSS-யை, விமர்சனம் செய்தால் இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு செழிப்பான வாழ்க்கை – பாக் சமூக ஆர்வலர் கருத்து..! 

Share it if you like it

கொரோனா தொற்று மிக தீவிரமாக இருந்த சமயத்தில் வல்லரசு நாடுகள் முதல் பல ஏழை நாடுகள் வரை இந்தியா செய்த மருத்துவ உதவிகள் ஏராளம். இன்னும் எவ்வாறு நமது மக்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் உதவலாம் என்று  பொறுப்பான இடத்தில் இருந்து ஆலோசனை வழங்க வேண்டிய இடத்தில் உள்ளது  இந்திய ஊடகங்கள்.

ஆனால் இன்று வரை மத்திய அரசு, பா.ஜ.க, பாரதப் பிரதமர் மோடி மீது மக்களுக்கு தவறான எண்ணம் உருவாகும் வகையில் தொடர்ந்து போலி செய்திகளையே இந்திய ஊடகங்கள் வழங்கி வருகிறது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

அதிலும் தமிழகத்தில் உள்ள சன் ஊடகம், நீயூஸ் 7, புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் ஒருபடி மேலே சென்று பாரதப் பிரதமர் மோடி குறித்தும் அவரின் ஆட்சி முறை குறித்தும் எவ்வாறு செய்திகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் பிரபல சமூக ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது.

தாலிபான்கள் குறித்து செய்தி வெளியிட்டால் பத்திரிகையாளர்களுக்கு மரண அடி, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க குறித்து செய்தி வெளியிடும் இந்திய பத்திரிக்கையாளர்கள் எப்படி உள்ளார்கள் என்று அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றின் மூலம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Image

Image

 


Share it if you like it