தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு தி.மு.க.வின் மீது தனக்கு கோவம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன தலைவராக இருப்பவர் தனியரசு. இவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர், ஜீவா டுடேவிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் ;
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவ கருத்துக்கள் வேகமாக களத்தை கட்டுவதற்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், மேற்கு மண்டலத்தில் இருக்கிற திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த குடும்பங்களில் உள்ள வாரிசுகளில் 90% சதவீதம் பேர் மோடி வாழ்க, அமித்ஷா வாழ்க, என்று முழங்க ஆரம்பித்து விட்டனர்.
நான் அறிந்த வகையில், என்னுடைய கிராமத்தில் அதுவும் எனது அருகாமையில் உள்ள வீடுகளில் அவரது பெற்றோர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். எனினும், அவரது வாரிசுகள் பா.ஜ.க.வை ஏற்றுக் கொண்டனர். தாமரை வாழ்க, அமித்ஷா வாழ்க, மோடி வாழ்க, என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். இதனால் தான், எனக்கு தி.மு.க.வின் மீது வருத்தமும் கோவமும் ஏற்பட்டுள்ளது என அவர் கூறியிருக்கிறார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.