மோடி போட்டோ விவகாரம்: எகிறிய பா.ஜ.க… அலறிய உ.பி.ஸ்.!

மோடி போட்டோ விவகாரம்: எகிறிய பா.ஜ.க… அலறிய உ.பி.ஸ்.!

Share it if you like it

பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பிரதமர் மோடி போட்டோவை அகற்றியதால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் எகிறி அடிக்கவே, ஆடிப்போன உ.பி.ஸ்கள் கப்சிப்பாகி விட்டனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி படம் மீண்டும் வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் இருக்கிறது வேப்பத்தூர் பேரூராட்சி. இதன் தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த அஞ்சம்மாள். இவரது கணவர் மதியழகன் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். தி.மு.க.விலும் கட்சிப் பதவியில் இருந்து வருகிறார். இங்கு 7-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சந்திரசேகர். பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர், பேரூராட்சி அலுவலகத்தில் மற்ற தலைவர்களுக்கு இணையாக பாரத பிரதமர் மோடியின் போட்டோவையும் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள், மற்றும் அஞ்சம்மாள் கணவர் மதியழகன் ஆகியோர், மோடி படத்தை அகற்றுமாறு தலைவர் அஞ்சம்மாளை கூறினர்.

ஆனால், தயங்கியபடியே நின்றிருந்த அஞ்சம்மாளை வற்புறுத்தி, பிரதமர் மோடியின் படத்தை அகற்றினர். பின்னர், அதை பேரூராட்சி செயல் அலுவலர் லதாவிடம் ஒப்படைத்தார். இந்தக் காட்சிகள் அனைத்தையும் பா.ஜ.க. கவுன்சிலர் சந்திரசேகர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். இதை பா.ஜ.க.வினர் வைரலாக்கி விட்டனர். இதையடுத்து, கொதித்தெழுந்த பா.ஜ.க.வினர், புத்தாண்டு தினமான இன்று மண்டலத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்றனர். பின்னர், அங்கிருந்த மகாத்மா காந்தி போட்டோ அருகிலேயே பாரத பிரதமர் மோடியின் படத்தையும் வைத்தனர். பா.ஜ.க.வினர் எகிறி அடித்ததைப் பார்த்த தி.மு.க.வினர் பம்மிவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சி, நகராட்சி பெண் தலைவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தலைவரை டம்மியாக வைத்துவிட்டு, அவரது கணவன்மார்களே ஆக்டிங் தலைவர்களாக வலம் வருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது இந்த சம்பவம். பிரதமர் மோடியின் போட்டோவை வைத்ததற்கு தலைவர் அஞ்சம்மாள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாக இருக்க, அவரது கணவர் மதியழகன் ஆர்ப்பாட்டம் செய்து அகற்ற வைத்திருக்கிறார். மாநகராட்சி பெண் மேயர்களின் நிலையும் இதுதானாம். இதை கேள்விப்பட்ட மக்கள், இதுதான் தி.மு.க.வின் பெண் சுதந்திரம் என்று கிண்டல் செய்துவருவதோடு, சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it