கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி, மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரகாப்பூர் கிராமத்தில் 15 வயது இந்து மதத்தை சேர்ந்த பட்டியலின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தொங்கிய நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
. இந்த வழக்கில் குற்றவாளியாக இஸ்லாமிய அடிப்படைவாதி ஷேக் இல்லியாஸ் மொண்டல் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து இந்த கொடூரத்தை செய்ததாக கூறப்படுகிறது. இந்து உரிமைகள் அமைப்பான ‘சிங்க பாஹினி’யின் தலைவர் தேவதுத்தா மாஜியின் தலையீட்டிற்குப் பிறகுதான் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் பட்டியல் சாதி (தலித்) சமூகத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்தின் (NCSC) தலைவரும் கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து 4 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். சிங்க பாஹினி அமைப்பும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ரூ.35000 வழங்கியுள்ளது.
உள்ளூர் காவல்துறையினர் இந்த சம்பவத்தை மூடிமறைக்க முயன்றதாகவும், பாதிக்கப்பட்டவரின் மரணத்தை தற்கொலை வழக்காக மாற்றவும் முயன்றதாக இந்து ஆர்வலர் தெரிவித்தார். இந்த சம்பவம் இந்தியா-வங்கதேச எல்லையில் உள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது