தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு, ரங்காரெட்டி மாவட்டத்தில் உயர்நீதிமன்றம் அமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்தது. நீதிமன்றம் அமைக்க தேவையான நிலத்திற்காக, பல்கலைக்கழகத்தின் பெயரில் இருக்கும் 100 ஏக்கர் நியதினை பயன்படுத்தவும் திட்டமிட்டு இருந்தது. இந்த தகவலை அறிந்த வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், தங்களின் பல்கலைக்கழகத்திற்க்கு உட்பட்ட நிலத்தில் நீதிமன்ற வளாகம் அமைக்கப்படக்கூடாது. வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிலம்தான் முக்கியம். அதனை பறிப்பது அபத்தன்மைத்து என எதிர்ப்பு குரலெழுப்பி, போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு செயல்பட்டு வந்ததாக தெரியவருகிறது.
சம்பவத்தன்று நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர்.
இருப்பினும், சில மாணவர்கள் தடுப்பை மீறி வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தடுப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் சாலையை நோக்கி சென்றிருப்பதாக தெரிகிறது. அந்த நேரத்தில், இரண்டு பெண் காவலர்கள், அந்த மாணவியை பின் தொடர்ந்தனர்.
பின்னர், மாணவி ஓடி செல்ல, இவருக்கு பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண் காவலர்கள் மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது
அந்த வீடியோவில், மாணவி ஒருவர் ஓடி சென்றிருக்கிறார். அப்போது, இவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண் காவலர்கள் மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்றிப்பது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.