சிறுமிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் !

சிறுமிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் !

Share it if you like it

திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது பெற்றோர் இருவரும் இறந்துவிட்டனர். இதனால், அச்சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த சில நாள்களாக சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், சிறுமியை அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர்.

அதில், அச்சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அச்சிறுமியிடம் உறவினர்கள் விசாரித்ததில், தனது வீட்டருகே இருக்கும் இளைஞர்கள் சிலர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீஸார் உடுமலையைச் சேர்ந்த ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவாபாரதி (22) மற்றும் 14, 15, 16 வயது சிறுவர்கள் என மொத்தம் 9 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதில், சிறுவர்கள் மூவர் திருப்பூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற 6 பேர் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக, மற்றொரு சிறுமியும் இந்தக் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக, மற்றொரு சிறுமியும் இதே கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “பெற்றோர் இறந்த நிலையில் உறவினர் வீட்டில் சிறுமி வசித்து வந்துள்ளார். பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய சிறுமி, அருகில் உள்ள கடைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, அவருக்கு 14 வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவன் மூலம் மற்ற அனைவரும் பழக்கமாகியுள்ளனர். வேலை வாங்கித் தருவதாக கூறி ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவாபாரதி (22) மற்றும் 14, 15, 16 வயதுடைய மூன்று சிறுவர்களும் உடுமலையில் உள்ள தனியார் லார்ட்ஜில் வைத்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின், மதன்குமார் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அச்சிறுமி மட்டுமல்லாமல் அச்சிறுமியின் தோழியையும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். . இதைத் தொடர்ந்து, 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், மூன்று பேர் சிறார் என்பதால் கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்றனர்


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *