கடந்த 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் திமுவினர் “ஒன்றிணைவோம் வா” என்கிற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களை அப்போதைய தலைமை செயலாளர் சண்முகத்திடம் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், நாங்கள் மனு கொடுக்க சென்றபோது தலைமை செயலாளர் சண்முகம் எங்களை தாழ்த்தப்பட்ட மக்களை நடத்துவது போல் நடத்தினார் என்று கூறினார். தயாநிதி மாறனின் இந்த கருத்து மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பட்டியலின மக்களை இழிவுபடுத்தியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் திமுக அமைச்சர் தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனாம்பேட்டையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்தும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஊடகங்கள் குறித்து நான் பேசியதில் உள்நோக்கம் இல்லை. எந்த ஊடகத்தையும் புண்படுத்தும் நோக்கமும் கிடையாது. நான் கூறிய கருத்துகளால் புண்பட்டிருந்தால், அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இவ்வாறு பட்டியலின மக்களை குறித்து தரக்குறைவாக பேசுவதை திமுக அமைச்சர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவ்வாறு பட்டியலின மக்கள் மீது வன்மத்தை கக்கிவிட்டு போகிற போக்கில் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறிவிடுவது.