மக்களின் தேவையை பூர்த்தி செய்த மத்திய பட்ஜெட் : எதிர்க்கட்சிகள் அப்செட் !

மக்களின் தேவையை பூர்த்தி செய்த மத்திய பட்ஜெட் : எதிர்க்கட்சிகள் அப்செட் !

Share it if you like it

2024- 25 ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் ஏதுமில்லை. ரூ. 3 லட்சமாக தொடர்கிறது. தங்கம், வெள்ளி, மொபைல்போன் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் மற்றும் போன் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர் திறன் மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மலா தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 4 இலக்குகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

9 அம்சங்கள் :-

இந்த பட்ஜெட், ‘வேளாண் உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, மனித வள மேம்பாடு, தொழில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை, நகர்ப்புற வளர்ச்சி, ஆற்றல் மேம்பாடு, உள்கட்டமைப்பு, புதுமை ஆராய்ச்சி, சீர்திருத்தங்கள்’ ஆகிய 9 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

இன்றைய பட்ஜெட்டை தாக்கல் நிதி அமைச்சர் நிர்மலா கூறுகையில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதாகவும், இது தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் அவருடைய பட்ஜெட் உரையில் இடம்பெற்ற அம்சங்கள் விவரம் வருமாறு:

  • ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் திட்டம் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நகர்ப்புறத்தில் உள்ள நிலத்தின் ஆவணங்களை டிஜிட்டல் மையமாக்க குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்வெளி வளர்ச்சி திட்டங்களுக்கு 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இளைஞர்களுக்கு 1000 தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிறுவி வேலைவாய்ப்பை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
  • விவசாய திட்டங்களுக்காக ரூ. 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பீகார் மாநிலத்தில் ஏற்படும் வெள்ள அபாய தடுப்பு பணிக்கு 11, 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசானது தனியாருடன் இணைந்து அணுஉலைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • பத்திரப்பதிவு கட்டணம் குறைக்க மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கப்படுமென்று தெரிவித்துள்ளது.
  • ஏழை மக்க்ளுக்காக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வெளி மாநில தொழிலாளர்களுக்கு அரசு செலவில் தங்குமிடம் அமைக்கப்படுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முத்ரா கடன் ரூ. 20 லட்சமாக உயர்வு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை – ஐதராபாத்- விசாகபட்டணம் தொழில் வழித்தடம் மற்றும் ஊரக இந்தியா திட்டத்திற்கு ரூ. 2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா ஆகிய 5 மாநில வளர்ச்சிக்கு மேம்பாடு சிறப்பு திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • புற்று நோய்க்கான 3 வகை மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

*சிறு குறு நடுத்தர தொழில்துறையினர் வளர்ச்சிக்காக கடன் உறுதி திட்டம்

  • நாடு முழுவதும் 10 ஆயிரம் இயற்கை வேளாண் ஆய்வு மையங்கள் அமைக்கப்படுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் வேளாண் உற்பத்தியை பெருக்க புதிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • அசாம் மாநிலத்தில் வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பிரதமரின் கிராம சாலை திட்டம் கீழ் 25,000 கிராமப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை.
  • வருமான வரி நிரந்தரக்கழிவு ரூ. 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஆண்டு வருமானம் ரூ. 3லட்சம் முதல் 7 லட்சம் வரை பெறுபவர்கள் 5 % வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை பெறுபவர்கள் 10 % வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை பெறுபவர்கள் 15 % வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை பெறுபவர்கள் 20 % வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கு மேல் பெறுபவர்கள் 30 % வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வருமான வரி தாக்கல் செய்ய தாமதமானால் கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
  • மொபைல்போன் உதிரி பாகங்களின் சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய அரசின் பட்ஜெட்டில் இளைஞர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருந்ததால் எதிர்க்கட்சிகள் எந்தவித குறையும் சொல்ல முடியாத அளவில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *