சன் டிவி-யை சேர்ந்த குணசேகரன், புதிய தலைமுறையை சேர்ந்த கார்த்திகை செல்வன், கார்த்திகேயன், இன்னும் பிற ஊடக நெறியாளர்கள் ஊடக விவாதம் என்கின்ற பெயரில் தி.மு.க, காங்கிரஸ், மற்றும் அந்நிய சக்திகளுக்கு ஆதரவாகவும் தங்கள் சித்தாந்தத்தை திணிக்கும் முயற்சியிலேயே இன்று வரை செயல்படுவதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் ஓர் அதிரடி முடிவினை எடுத்துள்ளார். இனி பொதிகை ‘டிவி’யில் அரசியல் விவாதங்களை நடத்த ஏற்பாடினை மேற்கொண்டு உள்ளார். தற்பொழுது இந்த துறையின் இணை அமைச்சராக இருப்பவர் முன்னாள் பா.ஜ.க தலைவர் எல். முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
துார்தர்ஷன் பொதிகை ‘டிவி’யில் இது நாள் அரசியல் விவாதங்கள் நடப்பது இல்லை. ஆனால் இனி வரும் காலங்களில் அனல் பறக்கும் அரசியல் விவாதங்களை பொதிகையில் காணலாம். குறிப்பிட்ட கட்சிக்கு முட்டு கொடுக்கும் விதமாக விவாதங்களை மேற்கொள்ளும் போலி நெறியாளர்களுக்கு இது சம்மட்டி அடி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.