நீதிமன்றம் கண்டித்தும் அறநிலையத்துறையானது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தராமல் இருக்கிறது என்று இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
ஆனால் பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபவத்தில் தன் எழுச்சியாக உணர்வுபூர்வமாக வழங்கும் தொகையை வசூல் செய்வதற்கு நவீன முறையில் யு பி ஐ பார்கோடு பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
பக்தர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்வதில் காட்டும் ஆர்வத்தை ஆலயத்தை நிர்வகிப்பதிலும் பக்தர்களுக்கு வசதிகள் செய்வதிலும் காட்டினால் நன்றாக இருக்குமே.!
மனம் மாறுமா அறநிலையத்துறை.இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.