ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்களுக்கு மார்பளவு சிலை அமைத்திட மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பாரத நாட்டை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்த பிரிட்டானிய கிறிஸ்தவர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர முதலாம் உலகப் போர் சமயத்தில் எம்டன் எனும் போர்க் கப்பல் மூலம் சென்னை கோட்டை மீது குண்டு வீசிய ஜெய் ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் நினைவு நாளை முன்னிட்டு நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறிஞர்களும் பொதுமக்களும் சென்னையில் தலைமை செயலகம் இயங்கி வரும் கோட்டைக்கு ஜெய் ஹிந்த் செண்பகராமன் பெயரை சூட்டி, வருங்கால சந்ததிகள் செண்பகராமன் பிள்ளையின் பெருமையை வருங்கால சந்ததி அறியும் வண்ணம் பள்ளி பாட புத்தகங்களில் அவரது வாழ்க்கை வரலாறு இடம் பெற செய்ய வேண்டும் என்றும்
எம்டன் கப்பல் மூலம் வீசப்பட்ட குண்டு விழுந்த இடத்தில் ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்களுக்கு மார்பளவு சிலை அமைத்திட மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் மாநில நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்ததின் பெயரில் இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் கடிதம் எழுதி கோரிக்கையை முன்வைத்து உள்ளார்.