அரசு அதிகாரிகளை தாக்கிய கொடூரம் : நாராயணன் திருப்பதி கண்டனம் !

அரசு அதிகாரிகளை தாக்கிய கொடூரம் : நாராயணன் திருப்பதி கண்டனம் !

Share it if you like it

செம்மஞ்சேரியில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரிகளை 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியுள்ள சம்பவத்திற்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,

பழைய மகாபலிபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் அரசு நிலத்தை பாதுகாக்க வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை ஐம்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நிலங்களை வளைத்து போட்டுக்கொண்டு, நில ஆக்கிரமிப்பை செய்யும் சட்ட விரோத கும்பல்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது. பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள இந்த இடங்களை வளைத்து போட முயற்சிப்பவர்களை சிறையிலடைக்க வேண்டும். இந்த கும்பல்களின் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் இருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளில் பதவியில் இருந்தால், கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *