கடலூர் மாவட்டத்தில் பாஜகவிற்கு வாக்களித்ததற்காக திமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பதிவில் திமுக அரசை கண்டித்து குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :=
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த சகோதரி கோமதி அவர்கள், திமுக கூட்டணி கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்துப் பதிவிட்டதற்கு, என் மீது காவல்துறையினரை ஏவி விட்டு, பாசிச திமுக அரசு ஒரு வழக்கை பதிவு செய்திருப்பதாக அறிகிறேன்.
திமுக மறைக்கத் துடித்த உண்மை இதோ. பாஜகவுக்கு வாக்களித்த காரணத்திற்காகத் தான், சகோதரி கோமதி அவர்கள் கொலை செய்யப்பட்டார் என்பதை, அவரது கணவர் திரு ஜெயக்குமார் மற்றும் அவரது சொந்தங்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். முன்விரோதம் என்பது திமுகவின் சப்பைக்கட்டு நாடகம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
ஊழல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களுக்காக நாங்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டங்களுக்கு, என் மீது பல வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே என் மீது இரண்டு வழக்குகள் தொடுத்திருக்கிறார்.
இவ்வாறு பொய்யான வழக்குகள் தொடுத்து எங்கள் குரல் வளையை நசுக்கி விடலாம் என்று திமுக பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது.
உங்கள் பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/annamalai_k/status/1782454502324568237