இந்திய ராணுவ வீரர்களின் மரணத்தை இழிவுப்படுத்திய கனிமொழியின் தீவிர ஆதரவாளர் சவுக்கு சங்கர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் அகால மரணம் அடைந்தனர். நாடு முழுவதும் இச்செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, உட்பட பல நாடுகள் பிபின் மறைவிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தி இருந்தனர்.
பாரதப் பிரதமர் மோடி, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பல்வேறு மாநில முதல்வர்கள் தங்களது இரங்கல் செய்தியை வெளியிட்டு இருந்தனர். வழக்கம் போல பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், போலி போராளிகள், உட்பட பலர் தலைமை தளபதியின் மரணத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர்.
இந்நிலையில் தி.மு.க மூத்த தலைவரும் தூத்துகுடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் சவுக்கு சங்கர் பாரதப் பிரதமர் மோடி குறித்தும், மறைந்த தலைமை தளபதி குறித்தும் அருவருக்கதக்க வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து உள்ளார். பிரதமர் மோடியை கொலைக்காரர் என்று கூறிய வி.சி.க கட்சியின் மூத்த தலைவர் வன்னி அரசை தான் தமிழக காவல்துறை கைது செய்யவில்லை? சவுக்கு சங்கரையாவது கைது செய்ய முன்வருமா? என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.