தொழிலாளர்களுக்கு துரோகமிழைத்த திமுக அரசு : தோழமை சுட்டிய கம்யூனிஸ்ட் !

தொழிலாளர்களுக்கு துரோகமிழைத்த திமுக அரசு : தோழமை சுட்டிய கம்யூனிஸ்ட் !

Share it if you like it

பெண்களுக்கு இலவச பயணம் என்று திமுக அரசு பெருமையாக தம்பட்டம் அடித்து கொள்கிறது. ஆனால் அரசின் பேருந்துகளோ மிகவும் பரிதாபகரமான அவல நிலையில் இருப்பதை நாம் செய்தித்தாள்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மட்டுமல்லாமல் நாமும் கூட அரசு பேருந்தில் பயணம் செய்து பார்த்திருப்போம் அரசு பேருந்தின் லட்சணத்தினை. இந்த நிலையில் போக்குவரத்து கழகத்தை திமுக அரசு நிர்வாகம் செய்யவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தினை சரியாக நிர்வகிக்க முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது. அரசு பேருந்துகளில் வருமானத்தை விட செலவுகள் தான் அதிகமாக உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வுகால சேமிப்பு பணத்தை கூட கழகங்கள் செலவு செய்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது தமிழக அரசு.

2019 ஆம் ஆண்டு 22 ஆயிரம் பேருந்துகள் இயங்கி வந்த நிலையில் தற்போது 19500 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது. 2018 ஆம் ஆண்டு 1 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது 1 லட்சத்து 15 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தாமல் தனியார்மயமாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக கம்யூனிஸ்ட் அரசு குற்றம் சாட்டி உள்ளது. போக்குவரத்து பணியிடத்தில் உள்ள காலி பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் தொழிலாளர்களை நியமிப்பதுதான் திமுக அரசின் சமூக நீதியா ? என்று கேள்வி எழுப்பியுள்ளது கம்யூனிஸ்ட்.

மினி பஸ்ஸை இயக்கி கிராமப்புற சேவையையும் நீண்டதூர பேரூந்துகளையும் ஒழிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக மக்களின் பயண உரிமை பறிக்கப்படும் என்றும் கழகங்களின் நிலையானது கேள்விக்குறியாகி விடும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களை சீரழிப்பதோடு தொழிலாளர்களையும் வஞ்சித்து வருகின்றனர். 19 மாதங்களாக ஓய்வு கால பலன்கள் தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. 8 வருடங்களாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வு மட்டும் 4 ஆயிரம் கோடி அரசு பாக்கி வைத்துள்ளது.

மாதத்திற்கு 100 கோடி ரூபாயை தமிழக அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களிடம் இருந்து கொள்ளை அடிப்பதாக கூறப்படுகிறது. புதிய பென்சன் திட்டத்தை கைவிடுவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு அந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. புதிய பென்சன் திட்டத்தால் 4 ஆயிரம் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பதாக கம்யூனிஸ்ட் குற்றசாட்டை வைத்துள்ளது.

இதனால் போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த அரசு நிதி வழங்க வேண்டும் என்றும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டுமென்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி கட்சியாக இருந்துக்கொண்டு எதற்கெடுத்தாலும் சமூக நீதி என பேசிக்கொண்டு போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியே திமுக அரசை விமர்சனம் செய்திருக்கிறது என்றால் திமுகவின் லட்சணத்தை பாருங்கள்.

முன்னதாக பட்டியலின அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறிக்கும் அவலங்களை நீக்குவதற்கு திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுகவின் கூட்டணி கட்சியான விசிக தோழமை சுட்டியது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *