தேர்தல் நெருங்குவதால் அனலடிக்கும் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கேற்றவாறு சுவாரஸ்யங்களும் தொகுதிக்குள் நடந்து பரபரப்பை கிளப்பி விட்டுக்கொண்டிருக்கின்றன.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார்கள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போதுமே திமுகவையும் அதிமுகவையும் பங்காளி கட்சிகள் என்று தான் சொல்லுவார். திமுகவும் அதிமுகவும் வெளியே எதிரிகளாகவும் மறைமுகமாக ஒன்றாகவும் இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார். அண்ணாமலையின் இந்த கருத்து உண்மையாகும் வரையில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் திமுக அமைச்சரான ஐ. பெரியசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவரது மகன் ஆகியோர் ஒன்றாக சந்தித்து அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது திண்டுக்கல் சீனிவாசன் அவரது மகனை திமுக அமைச்சரான ஐ. பெரியசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு என்று சொல்லவும், அவரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இது சம்பந்தமான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திமுகவும் அதிமுகவும் பங்காளி கட்சிகள் என்று அண்ணாமலை சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
https://x.com/ithanagaraj/status/1777270838548660616