பெரியவரு கொடைக்கானல்ல : சின்னவரு லண்டனுல ; உருப்படுமா தமிழகம் ?

பெரியவரு கொடைக்கானல்ல : சின்னவரு லண்டனுல ; உருப்படுமா தமிழகம் ?

Share it if you like it

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோவையில் குடிநீர் கேட்டு மக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் கோவை கணபதி, பூசாரிபாளையம் பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வரவில்லை என்றும், மாநகராட்சி ஊழியர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இந்தப் பகுதியில் கோவை மாநகராட்சி மேயர் குடியிருக்கும் வீடு உள்ளது. இதனை அடுத்து உடனடியாக தகவல் அறிந்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் இளங்கோ பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்பொழுது லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் லாரிகளில் வரும் குடிநீர் பணத்தை வாங்கிக் கொண்டு முக்கிய நபர்களுக்கு மட்டும் விநியோகிப்பார்கள். மேலும் அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் குடிநீருக்கு கட்டணம் வசூலிப்பார்கள். அதனால் குடிநீர் குழாய்கள் வழியாக மட்டும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கோவை மட்டும் இல்லாமல் தமிழகத்தில் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தினை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். மக்களை பற்றி கொஞ்சம் கூட நினைக்காத முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் குடும்பத்தோடு லூட்டி வருகிறார். அவரது மகன் உதயநிதியோ லண்டனில் லூட்டி அடிக்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழகத்தில் இவர்களை பார்க்கமுடியும். திராவிட ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகளை நாம் பார்க்க வேண்டுமோ ?


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *