ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆலோசனையில் இருந்து வரும் நிலையில் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல் மற்ற மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலங்களும் ஜனவரி மாதத்தோடு முடிவடைகின்றன. இந்நிலையில் 5 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் தேர்தல் கமிஷன் சார்பில் ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டன. மேலும் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் 5 மாநில தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மிசோராவில் 2023 நவம்பர் 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும், சட்டீஸ்கரில் 2023 நவம்பர் 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மற்றும் 17 ஆம் தேதியுமான வெள்ளிக்கிழமையும், மத்திய பிரதேசத்தில் 2023 நவம்பர் 17 ஆம் தேதியுமான வெள்ளிக்கிழமையும், ராஜஸ்தானில் 2023 நவம்பர் 23 ஆம் தேதியுமான வியாழக்கிழமையிலும், தெலுங்கானாவில் 2023 நவம்பர் 30 ஆம் தேதியுமான வியாழக்கிழமையும் தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் 2023 டிசம்பர் 3 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமையில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.