சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்னும் விவசாயி. ஏத்தாபூர் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவரால் மிக கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்த சம்பவத்திற்கு விடியல் குறித்து இதுவரை எந்த ஒரு தமிழக போராளியும் தனது கடும் கண்டனத்தையோ, எதிர்ப்பினையோ, இன்று வரை தெரிவிக்காத நிலையில்.
வி.சி.க தலைவரும் தமிழகம் நன்கு அறிந்த பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளன் சேலம் சம்பவம் குறித்து இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
இடையப்பட்டி முருகேசனை அடித்துக்கொன்ற SSI பெரியசாமியைச் சிறைப் படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது. தொடர்புடைய மற்ற காவலர்களையும் உடனே கைதுசெய்ய வேண்டும். முருகேசன் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இழப்பீட்டை மேலும் கூடுதலாக வழங்க வேண்டும்.
- மதுக்கடைகளின் தீமைகள் குறித்து ஒரு வார்த்தையும் இல்லை.
- மதுக்கடைகளை தமிழக அரசு உடனே மூட வேண்டும் என்று குறிப்பிடவில்லை.
- இனிமேல் இது போன்ற ஒரு நிகழ்வு தமிழகத்தில் நடைபெறாத வண்ணம் முதல்வருக்கு ஆலோசனை கூற வேண்டிய இடத்தில் உள்ள திருமா. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு பணமும், அரசு வேலையும், கொடுத்து விட்டால் போதும் என்கின்ற மனநிலைக்கு எப்படி வந்தார்.
- பணமும், அரசு வேலையும், உயிரிழந்தவரின் குடும்பத்தின் கடும் துயரத்தை போக்கி விடுமா?
இதுவே பா.ஜ.க ஆளும் மாநிலமாக இருந்திருந்தால் தனது வாயில் வரும் வழக்கமான ஆபாச வார்த்தைகளையும் தாண்டி, மக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் தனது அழுக்கு எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பார்.
மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த விடியல் அரசிடம் தனது எதிர்ப்பினை தெரிவித்தால். தனது நான்கு எம்.எல்.ஏ-க்களையும் இழக்க நேரிடும் என்கிற அச்சம் தவிர வேறு ஒன்றுமில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இடையப்பட்டி முருகேசனை அடித்துக்கொன்ற SSI பெரியசாமியைச் சிறைப் படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது. தொடர்புடைய மற்ற காவலர்களையும் உடனே கைதுசெய்ய வேண்டும். முருகேசன் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசுவேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இழப்பீட்டை மேலும் கூடுதலாக வழங்கவேண்டும்.@mkstalin pic.twitter.com/W7GB19bELY
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 24, 2021