இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிகர் விஜய்,அர்ஜுன் மற்றும் திரிஷா ஆகியவர்களின் நடிப்பில் வந்துள்ள படம்தான் லியோ. வருகின்ற 19 ஆம் தேதி முதல் லியோ திரைப்படம் வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை விதிகள் 1957 படி லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கும், 20 ஆம் தேதி 7 மணி சிறப்பு காட்சிக்கும் அனுமதி அளித்து அறிக்கையினை வெளியிட்டது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் இயக்குனர் மற்றும் நடிகர்களின் பெயர்கள் இருந்தது. அதில் விஜய் என்று குறிப்பிடாமல் தளபதி விஜய் என்று குறிப்பிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சாதாரண ரசிகர்கள் தான் தளபதி என பட்ட பெயரை வைத்து அழைப்பார்கள். ஆனால் ஒரு தமிழக அரசானது எப்படி ஒரு நடிகரை பட்டப்பெயர் சூட்டி அழைக்கலாம். இது அரசுக்கு அழகா ? பட்டப்பெயரை வைத்து குறிப்பிட அவர் என்ன விஞ்ஞானத்தில் சாதித்த டாக்டர்.அப்துல்கலாமா ? இல்லை வேளாண்மையில் சாதித்த எம்.எஸ் சுவாமிநாதனா ? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.