அழகு தமிழில் சிவன் பாடலை பாடி மோடியை உருக வைத்த ஜெர்மன் பாடகி !

அழகு தமிழில் சிவன் பாடலை பாடி மோடியை உருக வைத்த ஜெர்மன் பாடகி !

Share it if you like it

நேற்று பல்லடம் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. தொண்டர்கள், மக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு நீலகிரி மலைவாழ் மக்கள் நெய்த சால்வையை பரிசாக கொடுத்தனர். இதனை அடுத்து, பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, திருப்பூர் பல்லடத்தில் பிரதமர் மோடியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி கசாண்ட்ரா மற்றும் அவரது தாயார் சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடியின் முன் ‘அச்யுதம் கேசவம்’ மற்றும் “அண்ணாமலையானே உந்தன் அன்பின் கலந்தோமே’ என்ற பாடலை கசாண்ட்ரா பாடினார்.

அந்த பாடலை பிரதமர் மோடி அருகில் இருந்த கண்ணாடி மேஜையில் கைகளால் தாளமிட்டு கேட்டு ரசித்தார். பக்தி பாடலை தாளமிட்ட கேட்ட பிரதமர் மோடியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “கசாண்ட்ரா மே ஸ்பிட்மேனின் இனிமையான குரல் பரவலாக அறியப்படுகிறது. பல்லடத்தில் அவரையும், அவரது அம்மாவையும் சந்தித்தேன்.

இந்திய கலாச்சாரம், இசை மற்றும் உணவு ஆகியவற்றின் மீது கசாண்ட்ராவின் காதல் பற்றி நாங்கள் பேசினோம். இந்த சந்திப்பில், தமிழில் சிவமயமாக என்ற பக்தி பாடலையும், ‘அச்யுதம் கேசவம்’ என்ற பாடலை பாடியிருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://x.com/narendramodi/status/1762513480005845341?s=20


Share it if you like it