திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு செல்வதற்காக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து மதியம் சுமார் 1 மணி அளவில் சென்றது. பேருந்தானது பேருந்து நிலையத்தை விட்டு வெளியே திரும்பியபோது ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். ஆனால் பிரேக் பிடிக்காததால் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த கடைகளுக்குள் நுழைந்தது. இதனால் ஓட்டுனருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் இருக்கும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யவே மக்கள் பயப்படுகின்றனர். ஏனெனில் பேருந்தில் ஏறினால் நாம் உயிரோடு நாம் போக வேண்டிய இடத்திற்கு சேருவோமா என்று அச்சப்பட்டு கொண்டே பயணம் செய்யும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். தமிழக அரசு பேருந்துகளுக்கு எப்பொழுதான் விடிவு காலம் பிறக்குமோ தெரியவில்லை.