திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திருப்பூரை சுற்றியுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் எதிர்வரும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிகழ்வில் எந்த சாமி படமும் வைக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல் சித்தராமையா தலைமையிலான அரசு கர்நாடகாவிலும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அலுவலகங்கள் மற்றும் வார்டுகளிலும் ஏதாவது சாமி படம் இருந்தால் உடனடியாக அகற்றிவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது ஒட்டுமொத்த இந்து மக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபோல் கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் போன்ற நாட்களில் இதுபோல் சுற்றறிக்கை அனுப்ப முடியுமா ? திமுக அமைச்சராக இருந்துக்கொண்டு உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்று மேடை போட்டு பேசி வருகிறார். ஒரு அமைச்சராக இருந்துக்கொண்டு ஒரு மதத்தையே எதிர்த்து வருவது அவருக்கு நியாமாக தோன்றுகிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் இதுகுறித்து பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா அவர்கள், ஐ.என்.டி.ஐ கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நூறு வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர்கள் இந்த மண்ணின் பூர்வீக கலாச்சாரத்தின் மீதான வெறுப்பிலும் அவமதிப்பிலும் ஒன்றுபட்டுள்ளனர்.
ஆயுதபூஜையின் போது அரசு அலுவலகங்களில் பூக்கள், குங்குமப்பூ, மஞ்சள் மற்றும் பிற பூஜைக்கு தேவையான பொருட்களை பயன்படுத்த தடை விதித்து தமிழகத்தில் திமுக அரசும், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசும் இன்று சுற்றறிக்கை பிறப்பித்துள்ளன.
பல ஆண்டுகளாக, தென்னிந்தியாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஊழியர்களும் ஆயுதபூஜையை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகிறார்கள். இந்த முக்கியமான கலாச்சார சடங்கின் மீது கூட்டணி இப்போது தனது இலக்கை நிர்ணயித்துள்ளது. இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.