மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி முதல் பணியாக கிசான் சம்மன் நிதியின் 17வது தவணை தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார். இதனால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த திட்டத்தினை விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச்சங்கமும் நன்றியை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச்சங்க நிறுவன தலைவர், உ. ரவிச்சந்திரன் குறிப்பிட்டிருப்பதாவது :-
பாரத பிரதமராக திரு மோடி அவர்கள் பதவி ஏற்றதும், முதல் கையெழுத்தாக, விவசாயிகளின் மீதுள்ள பரிவை நிரூபித்து காட்டும் விதமாக, வருடத்திற்க்கு 6000 ரூபாய் வழங்கும் கிசான் சம்மான் நிதி திட்ட 17 வது தவணைக்கான நிதி ஒதுக்கீடு உத்தரவில் கையெழுத்திட்ட, பிரதமர் திரு மோடி அவர்களுக்கு விவசாயிகள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல, முதல்வர் ஸ்டாலின் அவர்களும் 232 கோடி விவசாய திட்டங்களை தொடங்கிவைத்த நிகழ்ச்சியும் வரவேற்க்க கூடியதே.விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில், உதவி செய்திட ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டம், முந்தைய ஆட்சியின் தொடர்ச்சிதான் என்றாலும் விவசாயிகளுக்கான நலன் பயக்கும் திட்டம் என்பதால் முதல்வரையும் விவசாய சங்கம் வாழ்த்தி வரவேற்க்கின்றது.
தற்போது சில நாட்களாக P.R பாண்டியன் என்னும் முன்னாள் தீவிர கம்யூனிஸ்ட் காரரும், தற்போதைய, காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளராக ஒரு சங்கத்தை பதிவு செய்துவிட்டு அடுத்ததாக, அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் (ஏன் இரண்டு சங்கம் என்று தெரியவில்லை) (கோலோச்சி கொண்டிருக்கின்றவரின் செயல்பாடுகள் அரசியல்வாதிகளை மிஞ்சும் வண்ணம் உள்ளது. கெஜ்ரிவாலின் கூட்டத்தில் பங்கேற்றார். கமலஹாசனோடு ஒன்றாக அமர்ந்திருந்தார்.தினகரனோடு ஒன்றியிருந்தார். திமுகவினரின் அந்நியோன்ய பாசத்துடன் மோடி அவர்களின் வேதாரண்ய வருகையை, 500க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்பில் மிதந்து, நீந்தி சென்று கருப்பு கொடி காட்டி” Go back மோடி”யில் அசத்தினார். பிறகு,பிரதமரின்கோவை வருகை ஆதியோகி சிலை திறப்பு நிகழ்சிக்கும், கருப்பு கொடி காட்ட முற்பட்டு 6,7 பேர் மட்டுமே கலந்து கொண்டதால் பிசுபிசுத்து போனது.
அதிமுக ஆட்சியின் போது அம் என்றால் ஆர்ப்பாட்டம், இம் என்றால் போராட்டம் என விவசாயிகளின் இனிஷியலில் கலக்கி கொண்டிருந்தவர், திமுக பதவி ஏற்றதும் தற்போதைய காலகட்டம் வரை “அமைதிகாத்தானாக” இருந்து, திமுக மற்றும் சில இயக்கங்களுக்கு மிகவும் பிடித்த, மோடி எதிர்ப்பு செல்லப்பிள்ளையான P. R பாண்டியன் அவர்கள், சமீபமாக, ‘திமுகவையும்’சற்றே இடித்துரைப்பது மிக மிக ஆச்சர்யமான ஒன்றாக உள்ளது. என்ன நடந்தது?
அவர்களிடமிருந்து, முன்புபோல ஒன்றும் பெரிதாக பெயரவில்லையா?காண்ட்டிராக்டுகள் மறுக்கப்பட்டுவிட்டனவா?இல்லை, சமீபத்தில் எடப்பாடி அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்த ஏதேனும் நிகழ்வு நடந்ததா? என்னவென்று புரியவில்லை! திடீரென்று, ஸ்டாலின் மோடிக்கு அண்ணன் என்று கண்டுபிடித்து உள்ளார். ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்று அலையும் இவரைப் போன்ற ஒரு சில ‘பச்சை துண்டு பசுத்தோல் புலிகளால், உண்மையான விவசாயம் செய்து வயிறு வளர்க்கும் அப்பாவிகளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. அரசியல் தலைவர்கள் சிலர், எதிரியை பலவீனபடுத்தும் நோக்கில் சில தீயவர்களை கூர்தீட்டிவிடுவது எதிரியை பதம்பார்த்து விட்டு பூமராங்காக திரும்பிவரும் என்பதை, குறுகிய எண்ண அரசியல்வாதிகள் உணரவேண்டும். எந்தவித விவசாய உழைப்பும் தெரியாத, ஏர் உழுதல், வரப்புவெட்டுதல், களை பறித்தல், சேறு கண்டு அசூசைபடுபவர்கள், விவசாய பிறப்பை மட்டுமே பின்னனியாக கொண்டு, தனது அரசியல் ஒதுக்கலை சாதகமாக மாற்றி,இயக்க தலைவனாக தன்னை உருமாற்றி வலம்வரும் P.R.பாண்டியன் போன்றோர்,ஐயா நம்மாழ்வார்,ஐயா காவிரி ரங்கநாதன், ஐயா மகாதானபுரம் ராஜாராம், ஐயா நல்லசாமி,ஐயா தீட்சிதர் போன்ற நிஜமான விவசாயிகளின் நலன் விரும்பும் பெரியோர்கள் மெளனமாக, தேவைபடும்போது உக்கிரமாக, பலமாக, தியாகத்தை ஏற்று, விவசாயிகளின் நலன் காத்தவர்களின் ‘பச்சை துண்டு’, நாட்டை துண்டாடும் தேசதுரோகர்களின்,’விருப்பப்பட்ட மடிப்புகளாக’மாறிவருவதை மாநில, மத்திய அரசுகள் முளையிலேயே கண்டறிந்து கிள்ளி எறியாவிட்டால், வளர்த்துவிட்ட எஜமானனையும் எதிர்த்து நிற்க்கும் மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடும். விவசாய உழைப்பாளிகளாகிய நாம், போலிகளின் நிறம் கண்டு விழிப்புணர்வு பெறுவது இன்றைய அவசிய தேவை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.